· சந்திரனில் டைட்டானியம் அதிகளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
Posted: Sat, 08 Oct 2011 17:39:21 +0530
பாரிஸ்: பூமியில் மிக குறைந்தளவே உள்ள டைட்டானியம் உலோகம், நிலவில் அதிகளவில் கொட்டிக் கிடப்பதாக, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அமெரிக்காவின் மூலம் சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுப்பப்பட்ட லூனார் ரிக்கான்ஸியன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. அதில் பொருத்தப்பட்ட கேமராக்களால் 7 வித்தியாமான ஓளி அலைகளில் எடுக்கப்பட்ட படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர்.மேலும் இந்த படங்களை கடந்த 1972ம் ஆண்டு,
· எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடிகை குஷ்புவின் செல்போன்கள் திருட்டு!
Posted: Sat, 08 Oct 2011 17:35:24 +0530
நடிகை குஷ்புவின் செல்போன்களை யாரோ அபேஸ் செய்து விட்டனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளார் குஷ்பு.ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவின்யூவில் நேற்று மாலை பொருட்கள் வாங்கச் சென்றார் குஷ்பு. அங்குள்ள ஒரு கடை மேஜையில் தனது 2 செல்போனை வைத்து விட்டு பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது மேஜையில் வைத்திருந்த 2 செல்போனையும் காணவில்லையாம். திருட்டுப் போன
· முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மற்றும் உறவினர் வீடுகளில் லஞ்ச ஓழிப்பு துறை சோதனை!
Posted: Sat, 08 Oct 2011 17:27:23 +0530
நாகர்கோவில்: முன்னாள் அமைச்சரும், திமுக குமரி மாவட்டச் செயலருமான சுரேஷ் ராஜன் மற்றும் அவரது நெருங்கிய உறவினர் வீடுகளில் இன்று போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.திமுக ஆட்சியின் போது சுற்றுலா துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ்ராஜன். இவர் குமரி மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார். பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சுரேஷ் ராஜன் வருமானத்துக்கு அதிகமாக
· தனித்து நின்று காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் - ஜி.கே.வாசனின் விருப்பம்
Posted: Sat, 08 Oct 2011 17:22:20 +0530
வேலூர்: காங்கிரஸ் கட்சி தனித்து நின்று காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பேசினார்.வேலூர் மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மேயர் வேட்பாளர் தேவி மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், "கடந்த
· தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி.பழனிசாமி உதவியாளர் சுந்தரேசன் கைது
Posted: Sat, 08 Oct 2011 17:10:29 +0530
கரூர்: மணல் விவகாரத்தில் அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. கே.சி.பழனிசாமியின் உதவியாளர் சுந்தரேசனையும், கிரிராஜன் என்பவரையும் கரூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம் மாயனூர் காவிரியாற்றுப் பகுதியில் அரசு புறம் போக்கு நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி.பழனிசாமி, அவரது உதவியாளர் சுந்தரேசன், மேலாளர் கிரிராஜ், மற்றும் ரவிராஜா, ராஜா, சசிகுமார், குமார்
· செந்துறை அருகே பிரபல ரவுடி பழனிவேல் கைது
Posted: Sat, 08 Oct 2011 17:06:40 +0530
அரியலூர்: செந்துறை அருகே பிரபல ரவுடி பழனிவேலு-வை போலீசார் கைது செய்தனர்.அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, முல்லையூர் காலனி தெருவை சேர்ந்த கதிர்வேல் மகன் பழனிவேல்(33). பிரபல ரவுடி. பழனிவேலு மீது பல காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் ரவுடி, பழனிவேலுவை தளவாய் போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், தளவாய் இந்தியா சிமெண்ட் தொழிற்சாலை
· நிலமோசடி வழக்குகளில் தி.மு.க.வினரை கைது செய்வது சரியே: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
Posted: Sat, 08 Oct 2011 17:02:43 +0530
சத்தியமங்கலம்: நிலப்பறிப்பு வழக்குகளில் தி.மு.க.வினரை தமிழக போலீசார் கைது செய்யும் செயல் சரியானது தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.சத்தியமங்கலம் நகர் மன்ற தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சுந்தர் என்பவரை ஆதரித்து முன்னாள் மத்திய ஆ.வி.கே.எஸ். இளங்கோவன் பிராசராம் செய்ததாவது.தமிழகத்தில் மக்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு கடும் அவப்
· ரஜினியின் புதிய புகைப்படம்... மோகன் பாபு மகள் சந்தித்த போது எடுத்தது!
Posted: Sat, 08 Oct 2011 16:58:23 +0530
சூப்பர் ஸ்டார் ரஜினியை, அவரது நண்பரும் நடிகருமான மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு சமீபத்தில் சந்தித்தது நினைவிருக்கலாம்.இந்தச் சந்திப்பின்போது ரஜினியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பின்னர் வெளியிடுவதாக லட்சுமி மஞ்சு தெரிவித்திருந்தார். அந்தப் படம் இப்போது வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சையில் குணமடைந்த பிறகு சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா
· ஆர்எஸ்எஸ் ஆதரவு ஹஸாரேவின் பிரச்சாரம் காங்கிரஸை பாதிக்காது! - அரியானா காங்கிரஸ்
Posted: Sat, 08 Oct 2011 16:46:43 +0530
அரியானா: ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட அன்னா ஹஸாரேவின் பிரச்சாரம் எந்த வகையிலும் காங்கிரஸ் வெற்றியைப் பாதிக்காது என அரியானா மாநில காங்கிரஸ் கூறியுள்ளது. அரியானா மாநிலம் ஹிஸ்ஸார் பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் காஹ்கிரஸை தோற்கடிக்கப் பாடுபடுவோம் என அன்னா ஹஸாரேவும் அவரது குழுவில் உள்ள கேஜ்ரிவால் போன்றவர்களும் 'சபதம்' செய்து பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டனர். அரியானா மாநில காங்கிரஸ்
· அமெரிக்காவில் 25,000 டாலருக்கு புரோக்கரை அமர்த்திய பர்வேஷ் முஷரப்!
Posted: Sat, 08 Oct 2011 16:41:08 +0530
வாஷிங்டன்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் அமெரிக்காவில் தன்னைப் பற்றி நல்லவிதமாக பரப்புரை செய்ய புரோக்கர் ஒருவரை 25,000 டாலர் மாத சம்பளத்திற்கு அமர்த்தியுள்ளதாக தகவல்கள் தெளியாகி உள்ளன.பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடந்த போது, அந்நாட்டு அதிபராக இருந்தவர் பர்வேஷ் முஷரப். பின்னர் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த முஷரப், பாகிஸ்தானிலிருந்து கிட்டத்தட்ட வெளியேற்றப்பட்டார்.
· தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நாளை கேயார் - எஸ் ஏ சி அணிகள் பலப்பரீட்சை: பலத்த பாதுகாப்பு
Posted: Sat, 08 Oct 2011 16:33:47 +0530
சென்னை: நாளை நடைபெறும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பிலிம்சேம்பரில் நாளை காலை இந்த தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், கேயார், டாக்டர் சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். எஸ்.ஏ. சந்திரசேகரன் அணியில் கதிரேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் துணை தலைவர் பதவிக்கும் கே.ஆர்.ஜி.,
· வைரஸ் காய்ச்சலால் மோகன்லால் அவதி... ப்ரியதர்ஷன் படப்பிடிப்பு ரத்து!
Posted: Sat, 08 Oct 2011 16:26:48 +0530
பிரபல நடிகர் மோகன்லால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அவர் நடித்துவந்த அரபியும் ஒட்டகமும் பி மாதவ நாயரும் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.யஇப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் மோகன்லால் கலந்து கொண்டு நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் அவ்வப்போது சிகிச்சை பெற்று படப்பிடிப்பில் கலந்து
· உயிரோடு புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு
Posted: Sat, 08 Oct 2011 16:17:49 +0530
போபால்: போபாலில் விவசாய நிலத்தில் பெற்றோரால் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம், பாட்னா கிராமத்தில் நேற்று முன்தினம் விவசாயி ஒருவர் விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது குழந்தை ஒன்றின் அழுகும் குரல் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி சென்ற விவசாயி நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையை கண்டெடுத்தார்.நிலத்தில்
· நிலமோசடி வழக்குகள்: போலீஸ் வலையில் துரைமுருகன் குடும்பத்தினர்!
Posted: Sat, 08 Oct 2011 16:09:46 +0530
வேலூர்: தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தினர் மீது நிலமோசடி குறித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் காட்பாடி காந்தி நகர் கூட்டுறவு நகர அமைப்பு சங்கத்திற்கு சொந்தமான 66,000 சதுர அடி காலிமனை காட்பாடி காந்தி நகர் பி.டி.கல்லூரி ஆகிய பகுதிகளில் உள்ளது. இந்த இடத்தை விற்பனை செய்ய சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், கடந்த
· தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு
Posted: Sat, 08 Oct 2011 16:05:36 +0530
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிரச்சாரத்தின் போது தேர்தல் விதிகளை மீறியதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்தார். அப்போது டெம்போ டிராவலர், தபேரா, லேன்சர், சபாரி, உள்ளிட்ட 4 வாகனங்களில்
· மதுரையில் விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு
Posted: Sat, 08 Oct 2011 15:31:14 +0530
மதுரை: தொகுதி ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசிய விஜயகாந்தின் உருவபொம்மை மதுரையில் எரிக்கப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று முன்தினம் தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தபோது, தேர்தலில் பொதுத்தொகுதி, தனித் தொகுதி என்று பிரித்து வைத்திருப்பது தவறு. அனைத்து தொகுதிகளையும், பொதுத்தொகுதியாக மாற்ற வேண்டும் என்றார்.விஜயகாந்த்தின் இந்த பேச்சை கண்டித்து, தமிழ் புலிகள் அமைப்பினர், மதுரை மாவட்ட
· தென்ஆப்ரிக்காவில் மான்ஸா கார், பிரைமா டிரக்கை அறிமுகப்படுத்தியது டாடா
Posted: Sat, 08 Oct 2011 15:17:27 +0530
தென் ஆப்ரிக்காவில் மான்ஸா செடான் கார் மற்றும் பிரைமா டிரக்கை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. தென் ஆப்ரிக்காவிலுள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் சர்வதேச மோட்டார் கண்காட்சி நடந்து வருகிறது. இதில்,டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது.மான்ஸா செடான் கார், விஸ்டா ஹேட்ச்பேக் கார், வென்ச்சர் பயணிகள் வாகனம், ஏஸ் மினிடிரக், டபுள் கேப் ஸினான் பிக்கப்
· புதிய ரேபிட் செடான் கார் உற்பத்தியை துவங்கியது ஸ்கோடா
Posted: Sat, 08 Oct 2011 15:12:57 +0530
மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் பெரும் ஆவலை தூண்டியுள்ள புதிய ரேபிட் செடான் கார் உற்பத்தியை ஸ்கோடா ஆட்டோ நேற்று துவங்கியது.இந்திய சாலைநிலைகள் மற்றும் தட்பவெப்பத்திற்கு ஏற்ற வகையில் புதிய செடான் காரை ஸ்கோடா ஆட்டோவடிவமைத்துள்ளது. சமீபத்தில் பிராங்பர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.தனது தாயகமான ஐரோப்பிய சந்தையில்
· 1000சிசி.,க்கு குறைவான பைக்குகளை அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ திட்டம்
Posted: Sat, 08 Oct 2011 15:10:07 +0530
சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ சூப்பர் பைக்குகள் தயாரிப்பிலும் புகழ்பெற்று விளங்குகிறது. இநதியாவில் தனது சூப்பர் பைக்குகளை இறக்குமதி செய்து பிஎம்டபிள்யூவின் மோட்டார்சைக்கிள் பிரிவான பிஎம்டபிள்யூ மோட்டோராட் விற்பனை செய்து வருகிறது.இந்த நிலையில், சூப்பர் பைக் சந்தையில் போட்டி அதிகரித்துள்ளதால் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் எதிர்பார்த்த அளவு விற்பனை அமையவில்லை. மேலும், பிஎம்டபிள்யூ
· தங்கம் விலை மேலும் ரூ 168 குறைந்தது!
Posted: Sat, 08 Oct 2011 14:49:42 +0530
சென்னை: தங்கத்தின் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்று சவரனுக்கு ரூ 168 குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.19 ஆயிரத்து 872 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ.168 குறைந்தது. ஒரு சவரன் ரூ.19 ஆயிரத்து 704 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,463க்கு விற்பனையாகிறது ஒரு கிலோ வெள்ளி ரூ.52
· பாட்டெழுத சென்றபோது படகு கவிழ்ந்து கடலில் விழுந்த சினேகன்!
Posted: Sat, 08 Oct 2011 14:34:28 +0530
மலேசியா தீவுக்கருகில் பாட்டெழுத படகில் சென்றபோது கடலில் விழுந்தார் கவிஞர் சினேகன். நீச்சல் தெரிந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.பிரபல சினிமா பாடலாசிரியர் சினேகன். 'உயர்திரு 420' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆனாலும் பாட்டெழுதுவதைத் தொடர்கிறார். இப்போது ரணம் என்ற படத்துக்கு பாடல் எழுதுகிறார் சினேகன். இப்படத்தின் பாடலை உருவாக்க இசையமைப்பாளர் மரியா மனோகர், இயக்குனர் விஜய் சேகரன், ஆகியோருடன்
· தெலுங்கானா பிரச்சனை குறித்து பிரதமருக்கு விளக்கி கூறிய ஆந்திர ஆளுநர்
Posted: Sat, 08 Oct 2011 14:22:36 +0530
டெல்லி: பிரதமரை சந்தித்த ஆந்திர ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன் தெலுங்கானா பிரச்சனை குறித்து விரிவாக விளக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.நிலைமை கைமீறிப் போய்விட்ட ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பகுதியை தனியாக பிரிக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து இன்றோடு 27வது நாளாக
· நாளை சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: பாத்திமா பாபு, ஆர்த்தி உள்ளிட்டோர் போட்டி
Posted: Sat, 08 Oct 2011 13:10:23 +0530
சென்னை: சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நாளை (9-ந்தேதி) நடக்கிறது. விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர். கல்யாண மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. அனைத்து டி.வி. நடிகர், நடிகைகளும் இதில் கலந்து கொண்டு ஓட்டு போடுகின்றனர். இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பானுபிரகாஷ், சிவசீனிவாசன், ராஜேந்திரன் ஆகியோர்
· தெலுங்கானா பிரச்சனையில் உடனடி முடிவு தேவை: ராகுல் காந்தியிடம் சிரஞ்சீவி வேண்டுகோள்
Posted: Sat, 08 Oct 2011 13:07:30 +0530
டெல்லி: ஆந்திர மாநிலத்தில் தொடரும் தெலுங்கானா பிரச்சனையில் உடனடி முடிவு எடுக்குமாறு ராகுல்காந்தியிடம், சிரஞ்சீவி பேச்சுவார்த்தை நடத்தினார்.தெலுங்கானா பிரச்சனை ஆந்திர முழுவதும் பூதகரமாக வெடித்து, இன்று 26 நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகரும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவருமான சிரஞ்சீவி, காங்கிரஸ் பொது செயலர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.அப்போது, ஆந்திராவில் உள்ள விவசாய நிலவரம்
· அரசு இலவச திட்டத்தில் வழங்கிய 65 ஆடுகள் மர்ம சாவு
Posted: Sat, 08 Oct 2011 12:56:55 +0530
குன்னூர்: குன்னூரில் அரசு இலவச திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 65 ஆடுகள் மர்மமான முறையில் பலியான குறித்து விசாரனை நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டம், குன்னூர் அடுத்த வண்டிசோலை கிராமத்தில் விவசாயிகளுக்கு, அரசு இலவச திட்டம் மூலம் ஆடுகள் வழங்கப்பட்டன. இவற்றில் 65 ஆடுகள் திடீரென மர்மமான முறையில் பலியாகின.இதுகுறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள், கால்நடை துறை அதிகாரிகளுக்கு
· விபத்தில் சிக்கிய மிக்-21 போர் விமானம்: விமானி உயிர்தப்பினார்
Posted: Sat, 08 Oct 2011 12:43:16 +0530
ஜெய்ப்பூர்: மிக்-21 போர் விமானத்தை தரையிறக்கும் போது, கோளாறு ஏற்பட்டதால் தற்காப்பு நடவடிக்கை மூலம் விமானி உயிர் தப்பினார்.இந்திய விமானப்படையின் போர் விமானமான மிக்-21 விமானத்தை நேற்று வழக்கமான பணிக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உத்தரலை விமான நிலையத்திற்கு விமானி அமிட் ஓட்டி சென்றார். காலை 11.30 மணியளவில் விமானத்தை உத்தரலை விமான நிலையத்தில் தரையறக்க முயன்றபோது,
· வாக்காளர்களுக்கு விநியோகிக்க மதுப்பாட்டிகளை பதுக்கியவர் கைது
Posted: Sat, 08 Oct 2011 12:41:07 +0530
திருச்சி: திருச்சியில் தேர்தலின் போது, வாக்காளர்களை கவர வீட்டில் மதுப்பாட்டிகளை பதுக்கியவர், போலீசாரால் கைது செய்யப்பட்டார்.திருச்சி மாவட்டம், வயலூர் சாலை பகுதியில் உள்ள வீடுகளில் மதுப்பாட்டிகளை பதுக்கி வைத்து விற்பதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வயலூர் சாலையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அம்மையப்ப நகரில் உள்ள ஒரு வீட்டின் மீது
· பேட்டரியில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க அசோக் லேலண்டு திட்டம்
Posted: Sat, 08 Oct 2011 11:36:06 +0530
பேட்டரியில் இயங்கும் வாகனங்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை பெறுவதற்கான முயற்சிகளை அசோக் லேலண்டு மேற்கொண்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய கனரக வாகன தயாரிப்பாளராக திகழும் அசோக் லேலண்டு நிறுவனம் தோஸ்ட் மூலம் இலகு ரக வாகன தயாரிப்பிலும் இறங்கியது. அடுத்த தோஸ்ட் பிளாட்பார்மில் பயணிகள் வாகனத்தை அறிமுகப்படுத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இந்த நிலையில், பேட்டரியில் இயங்கும் வகையில் பஸ்,
· ஹஸாரேவுக்கு தொழிலதிபர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள்! - பால் தாக்கரே
Posted: Sat, 08 Oct 2011 11:35:57 +0530
மும்பை: ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ளதாகக் கூறிக் கொள்ளும் அன்னா ஹஸாரேவுக்கு தொழிலதிபர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே. மேலும், 'இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. காரணம் இங்கே இருப்பவை பெரிய திமிங்கிலங்கள். ஹஸாரேயின் வலை கிழிந்து விடும்," என்றும் அவர் கூறியுள்ளார்.மும்பையில் நேற்று தசரா பேரணியில் பேசிய தாக்கரே,
· ஈரோடு: 2 குழந்தைகளை எரித்து கொலை செய்த தாயும் தற்கொலை
Posted: Sat, 08 Oct 2011 11:04:46 +0530
ஈரோடு: குடும்பத் தகராறில் மனமுடைந்த பெண் தனது 2 குழந்தைகளுக்கு தீவைத்துவிட்டு, தானும் தீக்குளித்து பலியானார்.ஈரோடு மாவட்டம், சங்கு நகரை சேர்ந்தவர் சரவணராஜ். ஜவுளி வியாபாரியான இவருக்கு சுபத்ரா என்ற மனைவியும், லிங்கேஸ்வரன்(9) என்ற மகனும், இலக்கியா(1) மகளும் உள்ளார். இவர்கள் சரவணராஜின் பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.சமீபக்காலமாக அவ்வப்போது சரவணராஜ் -சுபத்ரா இடையே வாக்குவாதம்
· கூடங்குளம் திட்டம் நிறைவேற ஆதரவு கொடுங்கள்! - ஜெயலலிதாவுக்கு பிரதமர் கடிதம்
Posted: Sat, 08 Oct 2011 11:01:24 +0530
டெல்லி: கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகள் தொடர ஆதரவு தாருங்கள் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் எழுதியுள்ள கடிதம்:"அணுசக்தி மின்சாரத்தை பயன்படுத்துவதற்காக, தொழில் நுட்ப ரீதியாகவும், அவசர கால நிலைமையை சமாளிக்கவும், மத்திய அரசு மிக உயரிய தரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. நமது மக்களின்
· விஜய் - சூர்யா போன்ற பெரிய நடிகர்களுடன் நடிக்கணும்! - அனன்யா
Posted: Sat, 08 Oct 2011 10:54:00 +0530
முதல் படமான நாடோடிகள் வெற்றிபெற்றபோது கூட அனன்யாவுக்கு இவ்வளவு வாய்ப்புகள் வந்ததில்லை.எங்கேயும் எப்போதும் படம் அனன்யாவுக்கு புதிய உலகையே திறந்துவிட்டுள்ளது. நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன.ஆனால் மிக நிதானமாகவும், தேர்ந்தெடுத்தும் கதைகளை ஒப்புக் கொள்கிறாராம் அவர்.தனது அடுத்த படங்கள், திட்டங்கள் குறித்து அவர் கூறுகையில், "எங்கேயும் எப்போதும் படம் பெரிய ஹிட்டானது மகிழ்ச்சி அளிக்கிறது. வருகிற வாய்ப்புகள்
· இன்னும் 6 மாதங்களில் புதிய ரேவா பேட்டரி கார்: மஹிந்திரா அறிவிப்பு
Posted: Sat, 08 Oct 2011 10:45:18 +0530
4 பேர் அமர்ந்து செல்லும் வசதியுடன் கூடிய புதிய ரேவா பேட்டரி காரை இன்னும் 6 மாதங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் மஹிந்திரா ரேவா நிறுவனம் மட்டுமே பேட்டரி கார்களை தயாரித்து வருகிறது. அந்த நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வரும் ரேவா பேட்டரி காரில் 2 பேர் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும்
· உள்ளாட்சித் தேர்தலில் அதிமுவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு - ஜெ-விடம் நேரில் தெரிவித்த எஸ்ஏசி
Posted: Sat, 08 Oct 2011 10:39:51 +0530
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஜெயலலிதாவை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் சந்தித்து தெரிவித்தார்.இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று பிற்பகல் திரைப்பட இயக்குனரும், விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் சந்தித்து, நடைபெற உள்ள
· புதிய எஸ்யூவி புக்கிங் செம விறுவிறுப்பு: மஹிந்திரா சுறுசுறுப்பு
Posted: Sat, 08 Oct 2011 10:37:17 +0530
உலகத்தரம், அதிக தொழில்நுட்ப வசதிகள், சிறந்த வடிவமைப்பு உள்ளிட்டவற்றை சுமந்து மார்க்கெட்டில் மார்தட்டி நிற்கும் மஹிந்திரா எஸ்யூவிக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.அறிமுகம் செய்யப்பட்டு 6 நாட்களில் புதிய எஸ்யூவி புக்கிங் விறுவிறுப்பாக நடந்து வருவதால் மஹிந்திரா மகிழ்ச்சியடைந்துள்ளது. மேலும், 5 நகரங்களில் மட்டும் புக்கிங் 5,000 என்ற எண்ணிக்கையை கடந்துள்ளதாக மஹிந்திரா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.புதிய எஸ்யூவி்க்கு இந்திய
· மின்வெட்டுப் பிரச்சினை நீண்டு கொண்டே போகிறதே! - கருணாநிதி
Posted: Sat, 08 Oct 2011 10:29:22 +0530
சென்னை: இந்த ஆட்சியில் மின்வெட்டுக்கு காரணங்கள் என பல்வேறு செய்திகள் வந்து கொண்டுள்ளனவே தவிர, மின்வெட்டு தீரவில்லை. இன்னும் நீண்டு கொண்டேதான் உள்ளது என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை:கேள்வி: அ.தி.மு.க. அரசு பதவிக்கு வந்த 6 மாதங்களுக்குள் ஒரே ஆண்டில் நான்காயிரம் கோடி ரூபாய் வரி கூடுதலாக வசூலிக்க திட்டமிட்டிருப்பது
· 'புலி வருது...' - திருகோணமலையில் பூச்சாண்டி காட்டும் ராணுவம்
Posted: Sat, 08 Oct 2011 10:14:17 +0530
திருகோணமலை: புலிகள் குறித்த அச்சம் காரணமாக திருகோணமலை பகுதிகளில் இராணுவம் மற்றும் போலீஸாரின் ரோந்து நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. தமிழருக்கு எதிரான கெடுபிடிகளும் அதிகரித்துள்ளன.திருகோணமலை நகர்ப் பகுதியில் உள்ள பெரும்பாலான இராணுவ தடுப்பரண்கள் அகற்றப்பட்டிருந்தும் ஒருநாளுக்கு நான்கு தடவைகளுக்கு மேல் இவர்கள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.'புலிகளை அழித்துவிட்டோம் என நாடாளுமன்றத்தில் மார்தட்டிக்
· 'ஆர்எஸ்எஸுக்காக பிரச்சாரம் செய்யும் ஹஸாரே' - காங்கிரஸ் குற்றச்சாட்டு
Posted: Sat, 08 Oct 2011 10:04:43 +0530
டெல்லி: ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தன்னார்வலர்கள் நிறைந்துள்ளனர். எந்த பதவியையும் எதிர்ப்பார்க்காமல் தங்கள் வேலையை அவர்கள் செய்து வருகின்றனர், என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.இதன் மூலம் அன்னா ஹஸாரேயின் இந்த போராட்டமே ஆர்எஸ்எஸ் பாஜக தூண்டுதலின் பேரில் நடந்துவரும் ஒரு அரசியல் சதி என தாங்கள் ஆரம்பத்திலிருந்து கூறி வந்தது
· மலிவு விலையில் விண்டோஸ் ஓஎஸ் கொண்ட ஜிபைவ் டேப்லட்
Posted: Sat, 08 Oct 2011 09:43:24 +0530
சீன நிறுவனமான ஜிபைவ் உலக அளவில் தனது மலிவு விலை மொமைல்போன்கள் மூலம் சிறந்த பெயரைப் பெற்றிருக்கின்றன. மேலும் "மேட் இன் சைனா" என்ற புதிய வார்த்தைகளுடன் வரும் இதன் டிவைஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு இறுதியில் 7 இன்ச் மற்றும் 10 இன்ச் கொண்ட ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ்
· தண்ணீருக்குள்ளும் இசை வழங்கும் வாட்டர்புரூப் எம்பி3 ப்ளேயர்
Posted: Sat, 08 Oct 2011 09:39:46 +0530
ஜிஎஸ்4யு தரமானமீயூசிக் ப்ளேயர்களை வழங்குவதில் எப்போதும் தனித்து இருக்கிறது. குறிப்பாக ஆன்லைன் மூலம் கெட்ஜட்டுகளை விற்பதில் தலைசிறந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனமாகும். 16 வருடங்களாக மென்பொருள் மற்றும் வன்பொருள் துறையில் இருக்கின்றனர். அதுபோல் ஐடி கன்சல்ட்டிங் சேவையையும் வழங்குகின்றனர். குறிப்பாக அவர்கள் புதிதாக ஜீக்ஸ்டப்4யு.காம் மூலம் ஜிஎஸ்4யு வாட்டர்ப்ரூப் எம்பி3 ப்ளேயரையும் மற்றும் ரேடியோவையும் அறிமுகப்படுத்தி
· இயற்கையின் தோழனாகும் மெர்லியின் ஆடியோ படைப்புகள்
Posted: Sat, 08 Oct 2011 09:35:26 +0530
மர்லி நிறுவனத்திற்கு அதன் தரமான தயாரிப்புகள் மூலம் ஒரு சிறந்த பெயர் உண்டு. குறிப்பாக மர்லியின் தயாரிப்புகளின் வெற்றிக்குக் காரணம் அதன் தரம் ஆகியவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கிறது. குறிப்பாக தரத்தைப் பொறுத்தவரை அவர்கள் விட்டுக் கொடுத்ததே இல்லை. அதுபோல் சுற்றுச்சூழலுக்கு உகந்த அவர்களின் படைப்புகள் மற்ற தயாரிப்பாளர்களுக்கு ஒரு பாடமாக இருக்கிறது. குறிப்பாக மீண்டும் பயன்படக்கூடிய
· புதிய ஆர்பிட்சவுண்டு ஸ்டீரியோ சிஸ்டம்- சிறப்பு பார்வை
Posted: Sat, 08 Oct 2011 09:31:25 +0530
சிறந்த சவுண்ட்பார்களை நீங்கள் வாங்க வேண்டும் என்று விரும்பினால் ஆர்பிட்சவுண்டு டி12வி3 ஸ்டீரியோ சிஸ்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அதற்கான் காரணங்கள் ஏராளமாக இருக்கின்றன.ஆர்பிட்சவுண்டு டி12வி3 ஸ்டீரியோ சிஸ்டம் பார்ப்பதற்கு மிக சிறந்த தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது. இதில் கிரிஸ்டல் க்ளியர் ஒலி துல்லியமாக இருக்கும். ஆனால் இதை வைப்பதற்கு நமக்கு ஒரு குறிப்பிட்ட இடம் தேவைப்படும். ஆனால்
· புதிய டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை களமிறக்க டெல் ஆயத்தம்
Posted: Sat, 08 Oct 2011 09:27:22 +0530
டெல்லின் புதிய இன்ஸ்பைரோன் ஒன் 2310 மேசை கணினியைப் பற்றிய தகவல்கள் பரவலாக இணைய தளங்களில் வெளிவருகின்றன. இந்த புதிய மேசை கணினி இந்த வருட இறுதியில் சந்தைக்கு வரவிருக்கிறது. இந்த டெல்லின் புதிய இன்ஸ்பைரோன் ஒன் 2310 மேசை கணினியில் எல்லா வசதிகளையும் நாம் அனுபவிக்கலாம். இந்த கணனி தொடுதிரை வசதியை வழங்குகிறது. டெல்லின் புதிய
· பட்ஜெட் விலையில் 4 டியூவல் சிம் போன்கள்: ஜிபைவ் அதிரடி
Posted: Sat, 08 Oct 2011 09:23:45 +0530
ஒரே நேரத்தில் 4 புதிய டியூவல் சிம் மொபைல்களை களமிறக்கி மார்க்கெட்டை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது ஜிஃபைவ் நிறுவனம். ஜி-115, ஜி-116, ஜி-233, மற்றும் ஜி-505 என்று பெயர் கொண்ட இந்த மொபைல்கள் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் டியூவல் சிம் போன்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் வகையில் வந்துள்ளன.இதில், இரண்டு போன்கள் பொழுதுபோக்குக்கான மல்டி மீடியா அம்சங்களுடன்
· எம்பி-4 ப்ளேயருக்கான புதிய ஹெட்போன்: எனர்ஜி சிஸ்டம்ஸ் அறிமுகம்
Posted: Sat, 08 Oct 2011 09:11:07 +0530
எனர்ஜி சிஸ்டம்ஸ் அதன் எம்பி-4 ப்ளேயர்கள் மூலம் பிரபலமானது. மேலும் அதன் படைப்புக்கள் மிகவும் தரம் வாய்ந்தவை. இப்போது அந்த நிறுவனம் புதிதாக எனர்ஜி சிஸ்டம்ஸ் 22 சீரிஸான எனர்ஜி 2204 டிஜே வயலட் ட்ரீம் மற்றும் எனர்ஜி 2204 டிஜே ரூபி ரெட் என்ற இரண்டு ஹெட்போன்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, எனர்ஜி 2204 டிஜே
· ஸ்மார்ட் போனும் டேப்லட்டும் கலவையில் வரும் புதிய ஆசஸ் பேட்ஃபோன்
Posted: Sat, 08 Oct 2011 09:06:44 +0530
ஆசஸின் பேட்ஃபோன் விரைவில் இந்திய சந்தைக்கு வரவிருக்கிறது. ஆசஸின் நோக்கம் என்னவென்றால் டேப்லட் மூலம் போனை நிறைவு செய்வதாகும். இந்த டேப்லட்டின் திரை பற்றி தெரியவில்லை. ஆனால் இது 4.3 இன்ச் திரையைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டேப்லட்டோடு இந்த பேட்போனை இணைக்கும் போது அதன் டிஸ்ப்ளேயின் அவுட்புட் 10.1 இன்ச்சாக மாறுகிறது. அதனால் அதன் காட்சி
· நேவிகேஷன் வசதியுடன் புதிய ஆன்ட்ராய்டு போன்: இசட்டிஇ அறிமுகம்
Posted: Sat, 08 Oct 2011 09:02:32 +0530
ஸ்கோர் X 500 என்ற பெயரில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது இசட்இடி நிறுவனம். கிராமப்புற சந்தையை குறிவைத்து இந்த புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கியுள்ளது இசட்டிஇ நிறுவனம். இயக்குவதற்கு எளிமையாக இருப்பதால் பாமர மக்களும் எளிதாக பயன்படுத்தும் அம்சங்களை இந்த மொபைல் கொண்டிருக்கிறது.ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த மொபைல் 3.5 இஞ்ச் திரையுடன்
· சூர்யா - கார்த்தியை இயக்குகிறார் வெங்கட் பிரபு?
Posted: Fri, 07 Oct 2011 19:03:26 +0530
அஜீத்துக்கு மங்காத்தா வெற்றியைக் கொடுத்தாலும், மது விருந்தில் நடந்த சோனா விவகாரத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டார் இயக்குநர் வெங்கட் பிரபு.இப்போது, அதைச் சரிகட்டும் விதத்தில் மெகா பட்ஜெட் படம் ஒன்றை இயக்கும் வேலையில் மும்முரமாக உள்ளார்.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்தான் தயாரிப்பாளர். ஹீரோ?சூர்யா அல்லது அவர் தம்பி கார்த்தி இருவரில் ஒருவராக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இந்த
· பத்து வருஷம் பீல்டுல இருக்கேன்னா சும்மாவா! - தம் கட்டும் த்ரிஷா
Posted: Fri, 07 Oct 2011 18:51:19 +0530
த்ரிஷாவை எங்கேயாவது பார்த்தால் கண்டும் காணாமல் போகப் பழகிக் கொண்டுள்ளனர் நிருபர்கள். தப்பித் தவறி, 'என்ன த்ரிஷா, தமிழ்ல ஆளையே காணோமே' என்று கேட்டுவிட்டால் போதும், சண்டைக் கோழியாய் சிலுப்புகிறார்."நானாக எந்த வாய்ப்பையும் எப்போதும் தேடிப் போனதில்லை (நம்பிட்டோம்!). என்னைத் தேடி வந்த எத்தனை வாய்ப்புகளை கதை சரியில்லை என உதறியிருக்கிறேன் தெரியுமா?தேவையில்லாமல் என்மேல் தவறான
· அன்னை தெரசாவுடன் ஒப்புமைப்படுத்தி நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சோனியா!
Posted: Fri, 07 Oct 2011 18:44:26 +0530
டெல்லி: அன்னை தெரசாவுடன் ஒப்புமைப்படுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு சர்வதேச விழிப்புணர்வு மையம் என்ற ஒரு அமைப்பு பரிந்துரைத்திருந்தது. ஆனாலும் சோனியாவுக்கு விருது கிடைக்கவில்லை.சர்வதேச விழிப்புணர்வு மையம் என்ற ஒரு அமைப்பு சோனியா காந்தியின் பெயரை இந்த விருதுக்குப் பரிந்துரைத்திருந்தது. உலக அமைதியை விரும்புபவர் சோனியா காந்தி, சிறந்த சமூக சேவகர்
· தனித் தொகுதிகள் தேவையில்லை-விஜயகாந்த் பேச்சைக் கண்டித்து கொடும்பாவி எரிப்பு
Posted: Fri, 07 Oct 2011 18:41:57 +0530
மதுரை : தலித்களுக்குத் தனித் தொகுதி, பொதுத் தொகுதி என தனித் தனியாக தொகுதிகள் இருக்கக் கூடாது. அனைத்துத் தொகுதிகளையும் பொதுத் தொகுதிகளாக மாற்ற வேண்டும் என்று பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைக் கண்டித்து தலித் மக்கள் விஜயகாந்த்தின் கொடும்பாவியை எரித்துள்ளனர்.தனித் தொகுதி, பொதுத் தொகுதி என்று தேவையில்லை. ஒரே தொகுதியாக அனைத்தையும் மாற்ற
· பொருளாதாரத்தை சீர்செய்யக்கோரி அமெரிக்காவில் போராட்டம்.-வேகமாகப் பரவுகிறது!
Posted: Fri, 07 Oct 2011 18:36:14 +0530
நியூயார்க்: அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிராக பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் பரவி வருகின்றன. பொருளாதார சரிவின்போது வங்கிகளுக்கு ஊக்கத்தொகை அளித்த அமெரிக்க அரசு வேலை இழந்தோரை தவிக்க விட்டு விட்டது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.அமெரிக்காவில் "வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின்" போராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. நியூயார்க் மட்டுமல்லாமல் தற்போது நாடு முழுவதும்
· பிரஸ் கவுன்சில் தலைவராக முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு நியமனம்
Posted: Fri, 07 Oct 2011 18:01:55 +0530
மதுரை: பிரஸ் கவுன்சில் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு நியமிக்கப்பட்டுள்ளார்.உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் மார்கண்டேய கட்ஜு (65). பல வழக்குகளில் பரபரப்பான தீர்ப்புகளை வழங்கி புகழ் பெற்ற இவர் கடந்த மாதம் 19ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, இவரை பிரஸ் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, சபாநாயகர் மீரா குமார்
· அரசு கேபிள் டிவிக்கு சேலத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
Posted: Fri, 07 Oct 2011 17:52:21 +0530
சேலம்: அரசு கேபிள் டிவி ஒளிப்பரப்பு கட்டணம், நிர்ணயிக்கப்பட்டதை விட 30 ரூபாய் கூடுதலாக சேலத்தில் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகம் முழுவதும் பல கேபிள் நெட்வர்க் மூலம் சேனல்கள் ஒளிப்பரப்பி வந்த நிலையி்ல், அரசு கேபிள் டிவி மூலம் 70 ரூபாய்க்கு 90 சேனல்கள் ஒளிப்பரப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.இதற்கான பணிகள் முடிவடைந்து கடந்த
· அதிகாரிகள் இடையே ஈகோ: தொழிலாளர் நல அலுவலகத்துக்கு 2 பூட்டு
Posted: Fri, 07 Oct 2011 17:49:02 +0530
நாகர்கோவில்: நாகர்கோவில் தொழிலாளர் நல அலுவலகத்தில் புதிய அதிகாரியை பதவி ஏற்கவிடாமல் ஏற்கனவே இருந்த பெண் அதிகாரி தகராறு செய்ததாக போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் அலுவலகத்துக்கு 2 பூட்டு போடப்பட்டுள்ளது.குமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே தொழிலாளர் நல அலுவலகம் (சமூக பாதுகாப்பு திட்டம்) செயல்படுகிறது. தொழிலாளர் நல வாரியங்கள் மூலம்
· முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு
Posted: Fri, 07 Oct 2011 17:45:03 +0530
மதுரை: முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மகன் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக போலீசார் வழக்குப் பதிந்து உள்ளனர்.மதுரை மாவட்ட ஊராட்சி கவுன்சிலுக்கு அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மகன் டேவிட் அண்ணாதுரை போட்டியிடுகிறார். இவர் திருமங்கலம் தருமத்துப்பட்டி பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது ஏராளமான வாகனங்கள் பின்தொடர்ந்து சென்றது.இதையடுத்து தேர்தல் விதியை மீறியதாக தருமத்தப்பட்டி
· உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடக் கோரிய ராசா மனு தள்ளுபடி!!
Posted: Fri, 07 Oct 2011 17:43:25 +0530
டெல்லி: 2 ஜி முறைகோடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்கக் கோரி, சிபிஐ நீதிமன்றத்தில் ஆ ராசா தாக்கல் செய்திருந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. 2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விசாரணையின்போது, உச்சநீதிமன்றத்தில் தானே நேரில் ஆஜராக அனுமதி அளிக்குமாறும், வழக்கறிஞர்களால் விளக்க முடியாத சில விஷயங்களை, நானே கோர்ட்டில் ஆஜராகி
· உலக குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாசிற்கு வெண்கலம் உறுதி
Posted: Fri, 07 Oct 2011 17:41:29 +0530
பாகூ: இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து அவருக்கு வென்றாலும், தோற்றாலும் வெண்கலப்பதக்கம் உறுதியாகி உள்ளது.அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகூ நகரில் உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் விகாஸ் கிருஷ்ணன், ஜெய் பகவான்,
· பரமக்குடியில் மாநில மாநாடு நடத்தப் போவதாக ஜான்பாண்டின் அறிவிப்பு
Posted: Fri, 07 Oct 2011 17:33:03 +0530
நெல்லை: பரமக்குடியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில மாநாடு நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிடுகிறது. மாநிலம் முழுவதும் 89 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளோம்.எங்கள் வேட்பாளர்களுக்கு வெற்றி
· சவூதி அரேபியாவில் 2 உ.பி. இளைஞர்கள் சுட்டு கொலை
Posted: Fri, 07 Oct 2011 17:26:08 +0530
துபாய்: சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த 2 இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.அவர்களை சுட்டுக் கொன்றவரை போலீஸார் கைது செய்தனர்.ஜெட்டா நகரில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் உள்ள செயில் அல்-சாகீர் நகரில் உள்ள இரும்பு பொருட்கள் தயாரிக்கும் சிறிய பட்டறை ஒன்று உள்ளது. இதில் உத்தர பிரதேசம், ஜான்பூரை சேர்ந்த அகமது யாசின் (46). முகமது ஷக்கீர்
· சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளை விடுவிக்க வேண்டும்: சீமான் கோரிக்கை
Posted: Fri, 07 Oct 2011 17:17:19 +0530
மதுரை: செங்கல்பட்டு, பூந்தமல்லியில் சிறப்பு முகாம்களில் உள்ள 29 இலங்கை அகதிகளை விடுவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 ஈழத் தமிழ் அகதிகளில் 15
· கோவை அருகே காங்கிரஸ் வேட்பாளர் பலி: தேர்தல் ஒத்திவைப்பு
Posted: Fri, 07 Oct 2011 17:13:20 +0530
கோவை: கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விபத்தில் பலியானதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம்(70). கருமத்தம்பட்டி நகர காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ளார். 2 முறை கருமத்தம்பட்டி பேரூராட்சி கவுன்சிலராக பதவி வகித்த இவர், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில், கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றார்.இந்நிலையில், இவர்
· காவல் நிலையத்தில் மாற்றுத் திறனாளியான கர்ப்பிணி பெண்ணுக்கு அடி- உதை
Posted: Fri, 07 Oct 2011 17:09:12 +0530
தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்டகாட் காவல் நிலையத்தில் வாய்பேச முடியாத கர்ப்பிணி பெண்ணை போலீசார் அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி ராஜகோபால் நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் புஷ்பா மற்றும் அவரது கணவர் தனசேகரன். இவர்கள் இருவரும் வாய் பேசமுடியாத, காதுகேளாத மாற்று திறனாளிகள்.இவர்கள் வாடகைக்கு குடியிருந்து வந்த வீட்டிற்கு, அருகில் உள்ள வீட்டார்
· மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?
Posted: Fri, 07 Oct 2011 16:41:44 +0530
இந்தக் கேள்விக்கு பதில் ரொம்ப சிம்பிள்.... அன்பாக நடந்து கொண்டால் உங்கள் மாமியார் உங்கள் அன்புக்கு அடிமையாகிவிடுவார்!நான் என்ன செய்தாலும் என் மாமியார் குறை கூறுகிறார். அவரை திருப்திபடுத்துவே முடியாது. நல்ல மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது தான் அனைத்து மருமகள்களும் கூறுவது. அப்படிப்பட்ட மாமியாரை எப்படி கைக்குள் போடுவது என்று பார்ப்போம்.ஒரு பிரச்சனை
· ஸ்டீவ் ஜாப்ஸின் நெகிழ வைக்கும் இறுதி நிமிடங்கள்!
Posted: Fri, 07 Oct 2011 16:34:16 +0530
பாலோ ஆல்டோ: புற்றுநோய் தன்னைத் தாக்கியது கடந்த 2004-ம் ஆண்டே ஸ்டீவ் ஜாப்ஸுக்குத் தெரிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து சில முறை சிகிச்சை மேற்கொண்டார். கல்லீரல் மாற்று அறுவையும் செய்து கொண்டார்.ஆனாலும் கடந்த பிப்ரவரியிலேயே அவருக்குத் தனது இறுதி நாட்கள் தெரிந்துவிட்டன. தனது நாட்கள் எண்ணப்படுவது தெரிந்ததும், மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் விஷயத்தைச் சொல்லிவிட்டார்.அந்த நண்பர்கள் மூலம்
· அசினிடம் சவால்விட்டு தோற்றுப்போன சல்மான் கான்!
Posted: Fri, 07 Oct 2011 16:15:23 +0530
நடிகர் சல்மான் கான் அசினிடம் சவால்விட்டு அதில் தோற்றுப்போனார்.நடிகர் சல்மான் கானும். அசினும் சேர்ந்து ரெடி என்ற சூப்பர்ஹிட் படத்தில் நடித்தனர். அந்த படப்பிடிப்பின்போது சல்மான் அசினிடம் சவால்விட்டார். அந்த சவாலில் இப்போது சல்மான் தோற்றுவிட்டாராம்.அந்த சுவாரஸ்யமான சவால் பற்றி அசின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.அது குறித்து அசின் கூறுகையில், "சல்மான் ரெடி படப்பிடிப்பின்
· சந்தானத்தைப் 'பிடித்த' சுந்தர் சி!!
Posted: Fri, 07 Oct 2011 15:42:28 +0530
காற்று எந்தப் பக்கம் அடிக்கிறதோ, அந்தப் பக்கம் சாயும் நாணலைப் போன்றவர்கள்தான் சினிமாக்காரர்கள். காரணம் இது முழுக்க முழுக்க வர்த்தகம். கலை என்பது காசுக்கு அப்புறம்தான்!இயக்குநர் சுந்தர் சியும் ஒரு பக்கா சினிமாக்காரர்தான். இவர் ஆரம்பத்தில் கவுண்டமணியை மட்டுமே நம்பி காமெடிப் படம் எடுத்தார். கவுண்டர் அலை ஓய ஆரம்பித்ததும், அன்றைக்கு பரபரப்பாக இருந்த வடிவேலுவை தனது
· தென் ஆப்ரிக்காவில் புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா
Posted: Fri, 07 Oct 2011 15:40:14 +0530
குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட தனது புதிய எஸ்யூவியை தென் ஆப்ரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது மஹிந்திரா.எக்ஸ்யூவி5ஓஓ என்று பெயரிடப்பட்டுள்ள தனது புதிய எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது.ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய எஸ்யூவி மார்க்கெட்டில் சலசலப்பை ஏற்படு்த்தியுள்ளது.மேலும், இந்த புதிய எஸ்யூவியின் அறிமுக விழாவில்
· அழைப்புகளை எளிதாக கையாளும் வசதியுடன் புதிய ஹெட்செட்
Posted: Fri, 07 Oct 2011 15:36:04 +0530
ஜபராவின் புதிய ஜபாரா ப்ரோ 9450 ஹெட்செட் மூலம் பலவகையான செய்திகளுக்கு இலக்காக ஆகி இருக்கிறது. இந்த புதிய ஜபரா ஒரு யூசர் ப்ரண்ட்லியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.இந்த புதிய ஜபரா ப்ரோ 9450ன் மிக முக்கிய அம்சம், வாடிக்கையாளர்களுக்கு கால்களை மேனேஜ் செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கிறது. இதன் ஹெட்செட்டிலுள்ள பட்டனைத் தட்டினால் போதும். அது
· லைபீரியா அதிபர் உள்பட 3 பெண்களுக்கு அமைதிக்கான நோபல்!
Posted: Fri, 07 Oct 2011 15:26:32 +0530
ஸ்டாக்ஹோம்: எலன் ஜான்சன் சர்லீப், லேமா போவீ மற்றும் தவக்குல் கர்மன் ஆகிய 3 பெண்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.அமைதிக்கான நோபல் பரிசு சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை எலன் ஜான்சன் சர்லீப், லேமா போவீ மற்றும் தவக்குல் கர்மன் ஆகிய 3 பெண்கள் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர். அவர்களுக்கு 1.5 மில்லியன் டாலர் பரிசுத் தொகை
· யு.ஏ.ஈ. தமிழ்ச் சங்கம் நடத்தும் கிரிக்கெட் போட்டி: விண்ணப்பிக்க 10-ம் தேதி கடைசி நாள்
Posted: Fri, 07 Oct 2011 15:22:30 +0530
துபாய்: துபாயில் ஐக்கிய அரபு அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி 2011 வரும் 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது.ஐக்கிய அரபு அமீரக தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி 2011 வரும் 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. இந்த போட்டி
· இந்தியப் படங்களை தடை செய்தால்தான் பாக். சினிமா பிழைக்கும்- பாக். நாளிதழ்
Posted: Fri, 07 Oct 2011 15:19:19 +0530
இந்தியாவிலிருந்து எந்தப் படத்தையும் பாகிஸ்தானில் திரையிட அனுமதிக்கக் கூடாது. அப்படி செய்தால்தான் பாகிஸ்தான் திரையுலகம் பிழைக்க முடியும், புத்துயிர் பெறமுடியும் என்று அந்த நாட்டு செய்தித் தாள் ஒன்று கூறியுள்ளது.இதுகுறித்து பாகிஸ்தான் நாளிதழ் தி நேஷன் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:இந்தியாவிலிருந்து எந்தப் படத்தையும் பாகிஸ்தானில் திரையிட அனுமதிக்கக் கூடாது, அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக லாகூரில்
· தாய்லாந்தில் கடும் புயலால் மழை- வெள்ளம்: 240 பலி
Posted: Fri, 07 Oct 2011 15:13:57 +0530
பாங்காக்: தாய்லாந்தில் கடும் புயலால் ஏற்பட்ட தொடர் மழையில், கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி, இதுவரை 240 பேர் பலியாகி உள்ளனர்.தாய்லாந்து நாட்டை கடந்த 6ம் தேதி முதல் கடும் புயல் தாக்கி வருகிறது. இதனால் நாட்டின் 58 மாகாணங்களில் உள்ள 179 மாவட்டங்களிலும் கடும் மழை பெய்தது. கடந்த 6ம் தேதி இரவு
· தொடர் பண்டிகைகளால் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் மந்தம்
Posted: Fri, 07 Oct 2011 15:09:49 +0530
சென்னை: தொடர் பண்டிகைகளால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் மிகவும் மந்தமாக நடக்கிறது. மக்களிடையும், அரசியல் தலைவர்களிடையேயும் பிரச்சார விறுவிறுப்பாக இல்லை.தமிழகத்தில் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில், பிரச்சார பெரிய அளவில் நடக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் முதல் நவராத்திரி
· நடத்தையில் சந்தேகம்: மனைவியின் தலையை வெட்டியெடுத்து தெருவில் வந்த கணவர் கைது
Posted: Fri, 07 Oct 2011 15:07:31 +0530
குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் மனைவி கள்ளத் தொடர்பு வைத்துள்ளாரோ என்ற சந்தேகத்தால் அவரின் தலையை வெட்டி, அதை ஊர்வலமாக எடுத்து வந்தவரை போலீசார் கைது செய்தனர்.அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஜபோரிகாக் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். அவரது மனைவி அமியா தாய்மரி தாஸ். நர்ஸ். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த அவர்களுக்கு விஷால்
· சிவகாசி ஜெயலட்சுமி மீதான நகை மோசடி வழக்கில் அக். 11ல் தீர்ப்பு
Posted: Fri, 07 Oct 2011 15:02:18 +0530
மதுரை: சிவகாசி ஜெயலட்சுமி மீது தொடரப்பட்ட நகை மோசடி வழக்கில் அக்டோபர் 11ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என மதுரை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.சிவகாசியைச் சேர்ந்த ஜெயலட்சுமி ஒரு காலத்தில் தென் மாவட்ட காவல்துறையில் பெரும் களேபரத்தை ஏற்படுத்தினார். போலீஸ் வேடத்தில் போய் காவல்துறையினர் பலரையும் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறை
· புதிய 150 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டம்?
Posted: Fri, 07 Oct 2011 14:49:39 +0530
இந்தியாவில் அமளிதுமளிபடும் 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் புதிய புயலை கிளப்ப ஹோண்டா முடிவு செய்துள்ளது. யூனிகார்ன் மூலம் மார்க்கெட்டில் கெட்டியான இடத்தை பிடித்துவைத்துள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் சிபிஆர் 150 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.இந்த புதிய பைக் 4 வால்வ் கொண்ட 150சிசி டிஓஎச்சி
· துபாய் மாநாட்டில் ஈடிஏ அஸ்கான் எம்.டி.க்கு உலகத் தமிழர் மாமணி விருது
Posted: Fri, 07 Oct 2011 14:13:16 +0530
துபாய்: துபாயில் நடந்த 2வது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குனருக்கு உலகத் தமிழர் மாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. துபாயில் 2வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு கடந்த 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை உலக வர்த்தக மைய கன்வென்ஷன் அரங்கில் நடந்தது.நிறைவு விழாவன்று சென்னை வளர்ச்சிக் கழக தலைவர்
· 23இஞ்ச் மானிட்டருடன் புதிய சாம்சங் கம்ப்யூட்டர்
Posted: Fri, 07 Oct 2011 14:04:57 +0530
மின்னனு தயாரிப்பில் எப்போதுமே சாம்சங் நிறுவனம் உச்சத்தில் இருக்கிறது. மேலும் வாடிக்கையாளர்களை திறமையாக திருப்திபடுத்தும் சக்தியை சாம்சங் பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் அவற்றின் தரமான படைப்புகளும் அதன் நியாயமான விலையும் ஆகும். குறிப்பாக தற்போது சாம்சங் புதிதாக சீரிஸ் 1 ஆல் இன் ஒன் என்ற பெயரில் புதிய கம்ப்யூட்டரை மார்க்கெட்டிற்கு கொண்டு வருகிறது. முதலில் அமெரிக்காவில்
· பணத்தை திரும்பபெறும் சலுகையுடன் ஐபோன் ஸ்பீக்கர் அறிமுகம்
Posted: Fri, 07 Oct 2011 13:58:37 +0530
ப்ளூயன்ஸ் நிறுவனம் ஸ்பீக்கர்கள் தயாரிப்பில் தனக்கென்று ஒரு சிறந்த பெயரையே வைத்திருக்கிறது. மேலும் இந்த நிறுவனம் காலத்தில் சூழலுக்கு ஏற்ப தமது படைப்புகளை அறிமுகப்படுத்தி அதன் மூலம் இன்னும் சந்தையில் நிலைத்து இருக்கிறது. ப்ளூயன்ஸ் முழுமையான் ஸ்பீக்கர் சிஸ்டத்தையும் அதுபோல் தளத்தில் நிறுத்தி வைக்கக்கூடிய ஸ்பீக்கர்களையும் வழங்கியிருக்கிறது. இவை கூட புத்தக அலமாரி ஸ்பீக்கர்கள் மற்றும் சரவுண்டு
· இந்திய-பாக். எல்லையில் ரூ. 135 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: பாகிஸ்தானியர்கள் தப்பியோட்டம்
Posted: Fri, 07 Oct 2011 13:39:51 +0530
அட்டாரி: இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ரூ. 135 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து எல்லைப் பாதுகாப்பு படையின் இன்ஸ்பெக்டர் பவன் சவுத்ரி பிடிஐ-க்கு கூறியதாவது,நேற்று முன்தினம் இரவு எல்லைப் பாதுகாப்பு படையின் ரோந்துப் படை இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி அருகே ரோந்தில் இருந்தது. அப்போது ரூ. 135 கோடி மதிப்பிலான
· ரேஸில் நம்பர் ஒன்னான 'ரா ஒன்'.... தயங்கும் தமிழ்ப் படங்கள்!
Posted: Fri, 07 Oct 2011 13:31:03 +0530
முன்பெல்லாம் தமிழகம் முழுக்க 20 திரையரங்கில் ஒரு இந்திப் படம் வெளியானாலே பெரிய சாதனை. சென்னையில் மூன்று அரங்குகளில் வெளியாகும். இப்போது நிலைமை வேறு.தமிழ்ப் படங்களுக்கு இணையாக இந்திப் படங்களும் அதிக திரையரங்குகளில் வெளியாகின்றன. அதுவும் ரஜினி நடித்துள்ளார் என்றால் கேட்க வேண்டுமா... கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட அரங்குகளில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெளியாகிறது
· மனைவியை அடித்த வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்
Posted: Fri, 07 Oct 2011 13:22:20 +0530
மனைவியை அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறி கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.மனைவி விஜயலட்சுமியை விட்டுப் பிரிந்து வசித்து வருகிறார் தர்ஷன். அவருக்கும் நடிகை நிகிதாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், இதனால்தான் தர்ஷனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் தன்னை அடி்த்து கொலை
· கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 3 மாதத்திற்குள்ளேயே விரட்டியடித்தவர் ஜெ.-அன்பழகன்
Posted: Fri, 07 Oct 2011 13:16:00 +0530
திருச்சி: இந்திய வரலாற்றில் மிகப்பெரிய குற்றாவாளியாகப் பேசப்பட்டவர் தான் ஜெயலலிதா. கூட்டணிக் கட்சிகளை 3 மாதத்திற்குள்ளேயே விரட்டி அடித்தவரும் அந்த அம்மையார் தான் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.திருச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரான கே. என். நேருவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது,இந்திய வரலாற்றில் மிகப்பெரிய
· சீமான் படம்: கிணற்றில் விழுந்த புது நடிகர்!
Posted: Fri, 07 Oct 2011 13:02:04 +0530
சீமான் நடிக்கும் கண்டுபிடி கண்டுபிடி படத்தின் ஷூட்டிங்கில் தருண் சத்ரியா என்ற புது நடிகர் கதவறி கிணற்றில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மூவி பஜார் என்ற நிறுவனத்தின் சார்பில் கல்கி யுவா என்ற இருபத்தியொரு வயது இளைஞர் தயாரிக்கும் படம் கண்டுபிடி கண்டுபிடி. மாயாண்டி குடும்பத்தார் படத்தை தயாரித்த சாமு சிவராஜ் இந்தப் படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளார்.முரளி,
· நில அபகரிப்பு வழக்கில் வீரபாண்டி ஆறுமுகத்தின் 3 உதவியாளர்கள் கைது
Posted: Fri, 07 Oct 2011 12:49:48 +0530
சேலம்: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர்கள் மூவரை போலீஸார் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்துள்ளனர்.வீரபாண்டி ஆறுமுகம் மீது நில அபகரிப்பு வழக்குகள், மிரட்டல் வழக்கு உள்ளிட்டவை தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் அவரது உதவியாளர்களான செங்கோட்டையன், கவுசிக பூபதி மற்றும் ஜிம் ராமு ஆகியோரைப் போலீஸார் நில அபகரிப்பு
· கார்களுக்கு ரூ.1,00,000 வரை நேரடி பணச்சலுகைகள்: ஸ்கோடா வழங்குகிறது
Posted: Fri, 07 Oct 2011 12:49:15 +0530
தனது அனைத்து பெட்ரோல் கார் மாடல்களுக்கும் ரூ.28,000 முதல் ரூ.1,00,000 வரை பண்டிகை கால சிறப்பு சலுகைகளை ஸ்கோடா ஆட்டோ வழங்குகிறது. வரும் 31ந் தேதி வரை இந்த சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்கோடாவின் பிரிமியம் செடான் காரான லாரா ஆக்டிவ் செடான் கார் மாடலுக்கு ரூ.1,00,000 வரை நேரடி பணச்சலுகையை ஸ்கோடா வழங்குகிறது.
· தேர்தல் பயிற்சிக்கு ஆசிரியர்களை பயிற்சிக்கு அழைத்து விட்டு ஆப்சென்ட் ஆன நகராட்சி ஆணையர்
Posted: Fri, 07 Oct 2011 12:40:51 +0530
சிவகங்கை: தேர்தல் பயிற்சிக்காக அனைவரும் வர வேண்டும் என உத்தரவு போட்டு விட்டு சிவகங்கை நகராட்சி ஆணையர் பயிற்சி வகுப்புக்கு வராததால் ஆசிரியர்கள் கடும் கோபத்துடன் நீண்ட நேரம் காத்திரு்து விட்டுத் திரும்பிச் சென்றனர்.சிவகங்கை நகராட்சி ஆணையர், தேர்தல் பயிற்சி வகுப்புக்கு சுற்று வட்டார ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று இன்றுகாலை பயிற்சி நடைபெறுவதாக
· ஆம்புலன்ஸ் மூலம் மது பாட்டில்களை கொண்டு போகிறார்கள்-டாக்டர் ராமதாஸ்
Posted: Fri, 07 Oct 2011 12:38:58 +0530
வேலூர்: உள்ளாட்சித் தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பேமதுக் கடைகளை மூட வேண்டும். தற்போது ஆம்புலன்ஸ்கள் மது பாட்டில்களை கடத்திச் செல்கிறார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு 10 நாள் முன்பேடாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தற்போது வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக ஆம்புலன்ஸ்கள் மூலம் மது பாட்டில்களை எடுத்துச் செல்கிறார்கள்.தேர்தல்
· ரமணா படம் பார்த்தீங்கள்ள, அதேபோலஊழல்வாதிகள் என்னிடமிருந்து தப்ப முடியாது: விஜயகாந்த்
Posted: Fri, 07 Oct 2011 12:31:50 +0530
தேனி: ரமணா படம் பார்த்தீர்கள் அல்லவா, அதேபோலத்தான் நானும். தேமுதிகவில் யாரேனும் ஊழல் செய்தால் அவர்கள் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது. ஊழல்வாதிகளை விரட்டி அடியுங்கள் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேனி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அல்லி நகரம் பேருந்து நிறுத்தம் அருகே அவர் பேசியதாவது,உள்ளாட்சிகளுக்கு மத்திய,
· ஆப்டிக்கல் ட்ரைவுடன் வரும் புதிய டெல் லேப்டாப்
Posted: Fri, 07 Oct 2011 12:14:40 +0530
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட டெல் நிறுவனம் மின்னனு பொருள்களைத் தயாரித்து வழங்குவதில் உலக அளவில் நற்பெயரைப் பெற்று இருக்கிறது. மேலும் டெல் லேப்டாப் உலகில் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறதென்றால் அது மிகையாகாது. அந்த வரிசையில் டெல் புதிதாக டெல் எக்ஸ்பிஎஸ் 14இஸட் என்ற புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்த இருக்கிறது. குறிப்பாக முதலில் இந்த புதிய லேப்டாப்பை சீனாவிலும்
· போலி ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ. 30 லட்சம் கொள்ளை: 5 பேர் கும்பல் கைது
Posted: Fri, 07 Oct 2011 12:06:54 +0530
சென்னை: சென்னையில் போலி ஏ.டி.எம். அட்டைகளை தயாரித்து, அதன்மூலம் கடந்த ஒரு மாதத்தில் 30 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.சென்னையி்ல் போலி ஏ.டி.எம். அட்டைகளை தயாரித்து, அதன்மூலம் குறிப்பிட்ட கும்பல் பலரது வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடிப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. சென்னை அண்ணா
· அதிக தமிழ் படங்களுக்கு இசையமைக்க ஆசை! - ஏ.ஆர்.ரஹ்மான்
Posted: Fri, 07 Oct 2011 12:03:40 +0530
சென்னை: அதிக தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்க ஆசையாக உள்ளது என்றார் ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.வசந்த பாலன் இயக்கத்தில் ஆதி-தன்ஷிகா ஜோடி நடித்துள்ள அரவான் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. டி சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. பின்னணிப் பாடகர் கார்த்திக் இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.இதுவரை
· ரூ.3 கோடியில் புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஆடம்பர கார் இந்தியாவில் அறிமுகம்
Posted: Fri, 07 Oct 2011 11:49:23 +0530
கூடுதல் சொகுசு வசதிகளுடன் கூடிய புதிய கோஸ்ட் ஆடம்பர காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்.பிரிட்டனை சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் ஆடம்பர கார் உலக அளவில் பிரசித்தி பெற்ற கார் மாடலாக திகழ்கிறது. உலகம் முழுவதும் உள்ள அரச குடும்பத்தினர் மற்றும் பெரும் கோடீஸ்வரர்களின் வாழ்வில் பிரிக்க முடியாத பாசப்பிணைப்பை இந்த
· ஸ்வீடன் கவிஞர் டோமாஸுக்கு இலக்கியத்துக்கான நோபல்
Posted: Fri, 07 Oct 2011 11:44:28 +0530
ஸ்டாக்ஹோம்: ஸ்வீடன் நாட்டு கவிஞர் டோமாஸ் டிரான்ஸ்ட்ரோமருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த 1931ம் ஆண்டு பிறந்தவர் டோமாஸ் டிரான்ஸ்ட்ரோமர்(80). கவிஞர். அவரது தாய் ஒரு பள்ளி ஆசிரியை, தந்தை பத்திரிக்கையாளர். டோமாஸ் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் இலக்கியம், அறிவியல், உளவியல் பாடப்பிரிவுகளில் கடந்த 1956ம் ஆண்டு பட்டம் பெற்று உளவியலாளராக
· 9 மாத பெண் குழந்தை கொன்று கால்வாயில் உடல் வீச்சு
Posted: Fri, 07 Oct 2011 11:39:07 +0530
சுசீந்திரம்: சுசீந்திரம் அருகே உள்ள கால்வாயில் மிதந்த 9 மாத பெண் குழந்தை உடல் குறித்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.குமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே உள்ள சி.டி.எம்.புரத்தில் உள்ள அனந்தனார் கால்வாயில் பெண் குழந்தை உடல் கிடப்பதாக சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் கி்ராம நிர்வாக அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் சம்பவ
· பெற்ற தாயை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக சுயேச்சை வேட்பாளர் கைது
Posted: Fri, 07 Oct 2011 11:34:39 +0530
சென்னை: பெற்ற தாயை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக சுயேச்சை வேட்பாளர் ஒருவரை சென்னை போலீஸார் கைது செய்தனர்.சென்னை மாநகராட்சியின் 140வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடுபவர் கருணாகரன். இவர் மனித உரிமை அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் மீது குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் பதிவானது.அதில் கருணாகரன் தனது
· திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட துணை நடிகை உள்பட 5 பேர் கைது
Posted: Fri, 07 Oct 2011 11:23:39 +0530
தூத்துக்குடி: தமிழகத்தை கலக்கிய வழிப்பறி கும்பலை சேர்ந்த துணை நடிகை உள்பட 5 பேரை தூத்துக்குடி, மெஞ்ஞானபுரம் போலீசார் கைது செய்தனர்.நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக தனியாக நடந்து வரும் பெண்கள் மற்றும் டூவீலரில் குடும்பத்துடன் வருபவர்களிடம், டூவீலரில் வந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து எஸ்பி நரேந்திரநாயர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன்
· ரூ.25,495 விலையில் புதிய இ-ஸ்கூட்டர்: லோஹியா அறிமுகம்
Posted: Fri, 07 Oct 2011 11:19:40 +0530
அழகிய வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு இல்லாத தொழில்நுட்பம் கொண்ட பேட்டரியுடன் புதிய இ-ஸ்கூட்டரை லோஹியா ஆட்டோ அறிமுகம் செய்துள்ளது.உத்தரபிரதேசத்தை சேர்ந்த லோஹியா ஆட்டோ நிறுவனம் இ-ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னிலை வகிக்கிறது. ஏற்கனவே, ஃபேம் மற்றும் ஓமா ஸ்டார் ஆகிய இரண்டு இ-ஸ்கூட்டர்களை அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.இந்த நிலையில், இளம் பெண்களை கவரும் வகையில் அழகிய
· கோஷ்டி பூசலால் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கை சின்னத்தை இழந்த காங்கிரஸார்
Posted: Fri, 07 Oct 2011 11:17:26 +0530
களக்காடு: களக்காடு யூனியன் மாவட்ட கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேருக்கு இடையே நடந்த கோஷ்டி பூசலால் இருவருக்குகமே கை சின்னம் கிடைக்காமல் போய் விட்டது.காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி மோதலுக்கு பஞ்சம் இருக்காது. களக்காடு யூனியன் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளராக மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணகுமார், பொன்னுத்துரை ஆகியோர் வேட்பு

0 comments:
Post a Comment