Pages

Friday, September 30, 2011

GTN NEWS : SUN TV NEWS 7PM (30-09-2011)




THANKS TO WWW.TECHSATISH.NET

GTN NEWS : JAYA TV NEWS 30-09-2011





THANKS TO WWW.TUBETAMIL.COM

Thursday, September 29, 2011

GTN NEWS : MAKKAL TV NEWS 30-09-2011 (MORNING)






THANKS TO : WWW.ISTREAM.COM

GTN NEWS : SUN TV HEAD NEWS 29-09-2011

Wednesday, September 21, 2011

GTN NEWS : SUN TV NEWS 21-09-2011(MORNING AND 7PM)





THANKS TO WWW.TAMILRULES.COM

Tuesday, September 20, 2011

GTN NEWS : SUN TV NEWS 7PM (20-09-2011)




THANKS TO WWW.TECHSATHISH.NET


Monday, September 19, 2011

GTN NEWS : SUN TV NEWS 7PM (19-09-2011)



GTN NEWS : TODAY TAMIL NEWS 19-09-2011

ஜெ திடீர் பல்டி- கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்துக்கு திடீர் எதிர்ப்பு

 

சென்னை: மக்களுக்கு அச்சம் தரும் எந்த ஆபத்தான திட்டத்தையும் எனது அரசு ஊக்குவிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்புதான், கூடங்குளம் திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று கூடங்குளம் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

நாட்டின் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கு 1988 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

2001
ஆம் ஆண்டு இந்திய அணு மின் கழகத்தால் பணிகள் தொடங்கப்பட்டு, முதல் மின் நிலையத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

இந்தச் சூழ்நிலையில், அப்பகுதி மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரிகள் சொன்னதையே எடுத்துச் சொன்னேன்...

இந்த நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட பொறியாளர்கள், அணு விஞ்ஞானிகள் ஆகியோருடன் எனது அரசு ஆலோசனை நடத்தியது. இதனையடுத்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், இந்த அணு மின் நிலையத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்ததையும் எடுத்துக் கூறி, உண்ணாவிரதப் போராட்டத்தை அப்பகுதி மக்கள் கைவிட வேண்டும் என்று நான் 16.9.2011 அன்றைய அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டேன்.

கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்த கருத்துகள் அந்தப்பகுதி மக்களின் அச்சத்தை தீர்க்கவில்லை. எனவே, அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். ஏற்கெனவே எனது அறிக்கையில் தெரிவித்தவாறு, மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய எந்த ஒரு திட்டச் செயல்பாட்டையும் எனது அரசு ஊக்குவிக்காது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அணு மின் திட்டம் மத்திய அரசு மற்றும் இந்திய அணு மின் கழகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணு மின் நிலையத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற அந்தப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவது மத்திய அரசின் கடமை ஆகும். ஆனால், மத்திய அரசு இதற்கான எந்த நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.

சம்பந்தமில்லாதது போல நடந்து கொள்வதா...

கூடங்குளம் பகுதியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் அந்தப் பகுதி மக்களின் அச்சம் ஆகியவைக் குறித்து தனக்கு சம்பந்தமே இல்லாததைப் போன்று மத்திய அரசு நடந்து கொண்டு வருகிறது. அந்தப் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கான முழுப் பொறுப்பும் மத்திய அரசிடமே உள்ளது. ஆனால், அந்தப் பொறுப்பை மத்திய அரசு இதுவரை எடுத்துக் கொள்ளாததோடு, இந்தப் பிரச்சனை ஏதோ மாநில அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனை போல் கை கழுவி விடுவதாக அதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

சமீபத்தில் சென்னை வந்த மத்திய அரசின் முக்கியத் துறையான சுற்றுச் சூழல் துறையின் அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஜெயந்தி நடராஜனிடம் இந்தப் பிரச்சனைக் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட போது, இந்தப் பிரச்சினை தன்னுடைய துறை சம்பந்தப்பட்டது அல்ல என்று கூறி கை கழுவிவிட்டார். மேலும், இதைப் பற்றி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துக் கொள்வார்கள் என்றும் மேம்போக்காக கூறியுள்ளதன் மூலம், இதில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்ற தொனியில், பொறுப்பற்ற முறையில் பதில் அளித்து உள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த, முக்கியத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் ஒரு அமைச்சர், கூடங்குளம் பகுதி மக்களின் அச்ச உணர்வை நீக்கும் வகையில் எதையும் தெரிவிக்காதது வருந்தத்தக்கதாகும்.

மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் நிறுவனமான இந்திய அணு மின் கழகத்தால் கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு தன்னுடைய பொறுப்பை முழுவதும் தட்டிக் கழிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வரும் நிலையில், மத்திய அரசு கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்தப்பகுதி மக்களுக்கு தகுந்த விளக்கங்கள் அளித்திருக்க வேண்டும். இந்தப் பிரச்சனைப் பற்றி சம்பந்தப்பட்ட மக்களுடன் பேசி இருக்க வேண்டும். அவ்வாறு எதுவும் செய்யாமல், தன்னுடைய கடமையில் இருந்து மத்திய அரசு தவறி உள்ளது மிகவும் துர திருஷ்டவசமானது. எனவே, இந்தப் பிரச்சனை குறித்து நான் பாரதப் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளேன்.

பிரதமரைச் சந்திக்கக் குழு

அந்தக் கடிதத்தில், நிதி அமைச்சர் . பன்னீர்செல்வம் தலைமையில், அனைத்து கட்சிகள், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு டெல்லி சென்று, பாரதப் பிரதமரை சந்திக்கும் என்றும், அப்போது ஒரு கோரிக்கை மனுவையும் இந்தக் குழு அளிக்கும் என்றும் தெரிவித்து உள்ளேன்.

பணிகளைத் தொடர வேண்டாம்...

மேலும், இந்தப் பிரச்சினையில் சுமூகத் தீர்வு எட்டப்படும் வரையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணிகள் எதையும் மேற்கொண்டு தொடர வேண்டாம் என்றும் நான் பாரதப் பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளேன்.

பிரதமருக்கு அளிக்க உள்ள கோரிக்கை மனுவில் நான் கையெழுத்து இடுவேன். அந்த மனுவில், ஒத்தக் கருத்துடைய கட்சித் தலைவர்களும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரதிநிதிகளும் கையெழுத்து இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், கோரிக்கை மனுவுடன் பிரதமரை சந்திக்க இருக்கும் இந்தக் குழுவில், இந்தப் பிரச்சனையில் ஒத்த கருத்துடைய கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதி மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்...

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் எனது அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, உண்ணாவிரதப் போராட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

-
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

 

 

 

 

அணுமின் நிலையம் குறித்து கூடங்குளம் மக்களின் கருத்தைக் கேட்காதது தவறு- விஜயகாந்த்

இடிந்தகரை: அணு மின் நிலையம் அமைப்பதற்கு முன்பு கூடங்குளம் பகுதி மக்களின் கருத்தைக் கேட்காதது தவறு என்று தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சி் தலைவருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் நடைபெற்றுவரும் தொடர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளவர்களை ஞாயிற்றுக்கிழமை அவர் சந்தித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனிநபருக்கு நிலப்பட்டா வழங்க அரசு அதிகாரிகள் எத்தனையோ கேள்வி கேட்கிறார்கள், விசாரிக்கிறார்கள். ஆனால் மக்களைப் பாதிக்கக்கூடிய அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு முன்னர் மக்கள் கருத்தைக் கேட்கவில்லை. மக்கள் விரும்புவதைச் செய்யுங்கள். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதைச் செய்யாதீர்கள் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

போராட்டத்தை நடத்தி வரும் மருத்துவர் உதயகுமார், வழக்குரைஞர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் என்னிடம், இப்பிரச்னை குறித்து பேச மத்திய அரசு நடுவர் குழுவை அமைக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றனர். நிச்சயமாக செய்வேன் என்றார் விஜயகாந்த்

 

 

 

கூடன்குளம் மக்களிடம் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: சமூக ஆர்வலர் மேதா பட்கர்

 

டெல்லி: கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி போராட்டம் நடத்தி வரும் மக்களிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் மேதா பட்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் இன்று கூடன்குளம் வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசுகிறார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், "ஜப்பான், பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகள் புதிதாக அணுமின் நிலையகங்களைத் துவங்குவதை நிறுத்திவிட்டன. அணுமின் நிலையங்களால் ஏற்பட்ட சீரழிவுகள் தான் அவர்களை இந்த முடிவு எடுக்க வைத்துள்ளது.

இதில் இருந்து இந்திய அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அணுமின் நிலையம் துவங்கும் முன்பு அப்பகுதி மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கூடன்குளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.

அணு சக்தியால் உலகமே பேராபத்தை சந்திக்கவிருக்கிறது. இதை மத்திய அரசு உணர்ந்து செய்லபட வேண்டும். போராடி வரும் மக்களை சந்தித்து நானும் போராட்டத்தில் ஈடுபடப் போகிறேன். தொடர் போராட்டம் நடத்தி வரும் அப்பகுதி மக்களிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

கூடன்குளம் திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்க ஜெயலலிதா மத்திய அரசிடம் பேச முன்வர வேண்டும்," என்றார்.

 

 

 

திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் திமுக போட்டி- கருணாநிதி அறிவிப்பு

 

சென்னை: திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக போட்டியிடும் என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

முன்னதாக அவர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து யோசித்து முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்தார். இதனால் இடைத் தேர்தலை திமுக புறக்கணிக்கலாம் என்று தகவல் பரவியது.

இதனால் திமுகவினர் அதிர்ச்சியடைந்த நிலையில், இந்தத் தேர்தலில் திமுக நிச்சயம் போட்டியிடும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார்.

முன்னதாக அவர் அளித்த பேட்டி:

கேள்வி- திருச்சி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா?

பதில்- திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று, அமைச்சராக பதவியேற்க வருகிற நேரத்தில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அந்த நண்பர் (மரியம் பிச்சை) விபத்துக்கு ஆளான காரணத்தால் நடைபெறுகின்ற இடைத்தேர்தல் அது. அந்த அனுதாபத்தின் காரணமாக இந்த இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி யோசித்து முடிவு செய்யப்படும்.

கேள்வி- இதுபோன்ற இடைத் தேர்தல்களில், அந்தத் தொகுதிகளில் ஏற்கனவே நின்று வெற்றி பெற்ற கட்சிக்கே அந்தத் தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டுமென்று ஏற்கனவே ஒரு முறை நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே?

பதில்- எல்லோரும் அந்தக் கருத்தை ஒத்துக் கொண்டால் நாங்களும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வோம்.

கேள்வி- உள்ளாட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவார்கள்?

பதில்- தேர்தல் தேதிக்கான அறிவிக்கை வரட்டும்.

கேள்வி- ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த வழக்கில் நீங்கள் விடுத்த அறிக்கையிலே 'அரசியல் நோக்கத்தோடு' என்று சொல்லியிருக்கிறீர்கள், அப்படி ஏதாவது திமுகவிற்கு எதிராக நடைபெறுவதாக சந்தேகப்படுகிறீர்களா?

பதில்- திமுகவிற்கு எதிராக நடைபெறுவதாக சந்தேகம் அல்ல. ஜாமீன் கூட கொடுக்க நீதிமன்றம் முன்வராமல் காலம் நீண்டு கொண்டே போவதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

கேள்வி- இந்த விவகாரத்தில் டிராய் நிறுவனத்தின் அறிக்கையில் இழப்பு இல்லை என்று சொல்லியிருப்பதால் காலதாமதம் ஆகிறதா?

பதில்- அது வேறு விவகாரம், இது வேறு விவகாரம். இரண்டையும் இணைத்திட முடியாது.

கேள்வி- குஜராத் முதல்வர் மோடி உண்ணாவிரதம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்- மத நல்லிணக்கத்தைப் பற்றி மோடியின் கருத்து எனக்கு உடன்பாடானதுதான். அதே நேரத்தில் மோடியின் கடந்த காலச் செயல்பாடுகளை மறந்து விடவும் முடியாது.

கேள்வி- பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எல்லா கட்சியினரும் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்கிறார்களே?

பதில்- எல்லா கட்சியினரும் சொல்கிற கருத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

கேள்வி- அது சாதிக் கலவரம் அல்ல என்று சட்டசபையில் 'அம்மா' சொல்லியிருக்கிறார்களே?

பதில்- 'அம்மா' சொல்லி விட்டால் அதை மறுக்க முடியுமா?

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

இந் நிலையில் இடைத் தேர்தலில் திமுக போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.

திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்:

இதற்கிடையே திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மேற்கு தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அதற்கான விண்ணப்பித்தை பூர்த்தி செய்து 19, 20ம் தேதிகளில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக்கழகத்தின் நேரடியாக அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.5,000 என்று கூறியுள்ளார்.

அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருப்பது எப்படி?:

இந் நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கான தனி தொகுதிகள், மகளிருக்கான தொகுதிகள் அறிவிக்கப்படாத நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருப்பது மாநில தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்த மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னரே ஆளுங்கட்சியான .தி.மு..வின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. தாழ்த்தப்பட்டோருக்கான தனி தொகுதிகள் மற்றும் மகளிருக்கான தொகுதிகள் எவை எவை என்று மாநில தேர்தல் ஆணையம் இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

10
ஆண்டு காலத்திற்கு ஒருமுறை இடஒதுக்கீட்டு சுழற்சிமுறை பின்பற்றப்பட வேண்டும் என்ற நிலையில் 5 ஆண்டு காலம் மட்டுமே முடிந்த பிறகு மேலும் 5 ஆண்டு காலம் மீதம் உள்ள நிலையில் இடஒதுக்கீடு சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

தேர்தல் ஆணையம் மீது சந்தேகம்:

இந்த அடிப்படையில்தான் ஆளுங்கட்சியான .தி.மு.. எந்தெந்த தொகுதியில் யார் போட்டியிடுவது? என்ற தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இது அரசியல் கட்சிகளை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. மாநில தேர்தல் ஆணையம் இடஒதுக்கீடு குறித்த விவரங்களை ஆளுங்கட்சிக்கு மட்டும் முன்னரே தெரிவித்து இருக்கிறதோ? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

ஏற்கனவே, மாநில தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர் என்று தி.மு.. வக்கீல்கள் மனு ஒன்றினை அவரிடம் அளித்திருக்கிறார்கள். இந்த நிலையில், ஆட்சியில் உள்ள .தி.மு.. மட்டும் தனது வேட்பாளர்களை அறிவித்திருப்பது, மாநில தேர்தல் ஆணையம் குறித்த இந்த குற்றச்சாட்டினை உறுதிபடுத்துவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

 

 

 

சென்னையில் நடந்த 2 மணி நேர சாலை மறியலால் பல மணிநேரம் போகுவரத்து பாதிப்பு

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் சிறிது நேரம் நடந்த சாலை மறியலால் பல மணி நேரத்திற்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் பேரவதிக்குள்ளானார்கள்.

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் உள்ள கோர்ட் வளாகம் அமைந்துள்ள சாலை தற்போது ஒரு வழிப் பாதையாகி விட்டது. பல மாதங்களுக்கு முன்பே இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் அங்கு நடை மேம்பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

அந்த நடை மேம்பாலத்தைத்தான் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று காவல்துறையினர் உத்தரவிட்டனர். மேலும் அந்த சாலையில் இருந்த சிக்னலையும் மூடி விட்டனர்.

ஆனால், நடை மேம்பாலம் மிகவும் உயரமாக இருப்பதால் வயதானவர்களும், குழந்தைகளும், பெண்களும் ஏற முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து சாலையைக் கடந்து போக ஆரம்பித்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் எழுந்தது.

இதைத் தொடர்ந்து இந்த சாலையில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும், சிக்னலை மீ்ண்டும் இயங்கச் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக மக்கள் கோரி வந்தனர். ஆனால் போலீஸ் தரப்பிலோ, அரசுத் தரப்பிலோ, மாநகராட்சி தரப்பிலோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை எட்டரை மணியளவில் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் அதிரடியாக சாலை மறியலில் குதித்தனர். இதனால் விமான நிலையம், கிண்டி பகுதிகளிலும், அண்ணா சாலையில் தேனாம்பேட்டை வரையிலும் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கான வாகனங்கள் அனுமார் வால் போல நீண்டு முடங்கிக் கிடந்தன. எநத்ப் பக்கமும் போக முடியாத அளவுக்கு சந்து பொந்துகளில் எல்லாம் போக்குவரத்து முடங்கிப் போன. கிட்டத்தட்ட சென்னையே முடங்கிப் போனது போல இருந்தது இந்த போக்குவரத்து பாதிப்பு.

போலீஸார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தால் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக மக்கள் திட்டவட்டமாக கூறி விட்டனர். இதனால் போக்குவரத்து மேலும் பாதிப்பைச் சந்தித்தது. இதையடுத்து ஒரு வழியாக பத்து மணியளவில் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனால் போராட்டத்தின் எதிரொலியாக முடங்கிப் போயிருந்த போக்குவரத்து சீராக பிற்பகல் 1 மணி ஆனது. இந்த போக்குவரத்து முடக்கத்தால் மக்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி, அலுவலகம், மருத்துவமனை செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

 

 

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கொத்தனார் கொலை- மனைவி, கள்ளக்காதலன் கைது

தூத்துக்குடி: தனது கள்ளக்காதல் உறவை கண்டித்த கொத்தனாரை திட்டமிட்டு கொலை செய்த மனைவி கள்ளக்காதலருடன் போலீசாரிடம் சிக்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் (40). இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.

முத்தையாபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி (34). இவர் ராமரின் உறவினர். இருவரும் கட்டடத் தொழிலாளர்கள். கடந்த ஆண்டு, பெரியசாமியின் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து முத்தையாபுரத்தில் தனியாக வசித்து வந்த பெரியசாமியை, தனது வீ்ட்டில் வந்து தங்கி கொள்ளுமாறு ராமர் அழைத்தார்.

இந்த நிலையில் பெரியசாமிக்கும், ராமரின் மனைவி சுந்தரிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டு விட்டது. அதிக குடிப்பழக்கம் கொண்ட ராமர் தினமும் போதையில் வீட்டிற்கு வந்தது கள்ளக்காதல் ஜோடிக்கு மேலும் செளகரியமானது.

இந்நிலையில் குடிப்பழக்கத்தால் ராமரின் உடல் பாதிக்கப்பட்டது. இதனால் குடிப்பழக்கத்தை ராமர் குறைத்தார். இதனால் சுந்தரியும், பெரியசாமியும் தங்களது கள்ளக்காதலைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த சமயத்தில், இருவரும் நெருக்கமாக ஒருமுறை இருந்தபோது அதை ராமர் பார்த்து விட்டார். அதிர்ச்சி அடைந்த அவர் இருவரையும் கண்டித்தார். இதனால் இருவரும் ஆத்திரமடைந்தனர். தங்கள் கள்ளக்காதலுக்கு தடையாக நிற்கும் ராமரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

இதன்படி பெரியசாமி ராமருக்கு மது வாங்கி குடிக்க வைத்தார். இதில் போதையில் தள்ளாடிய ராமரை குரும்பூர் காட்டு பகுதிக்கு கொண்டு சென்று அங்கு ராமரின் தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டார். இதில் தலையில் படுகாயமடைந்த ராமர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பிணத்தை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில், முன்னுக்குப் பின்னாக பதிலளித்த இருவரும் கடைசியில் ராமரை திட்டமிட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

கள்ளக்காதலுக்காக உறவினரை கொலை செய்த பெரியசாமி மற்றும் கணவரை கொலை செய்ய உடந்தையாக இருந்த சுந்தரி ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

 

உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு: அதிமுகவுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் பேச்சுவார்த்தை- இன்றும் தொடரும்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு குறித்து அதிமுகவினருடன் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தி வரும் பேச்சுவார்த்தை இன்றும் தொடர்கிறது.

உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிமுக குழுவோடு கடந்த வெள்ளிக்கிழமை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் வைத்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று மாலை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

அதில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் . பன்னீர்செல்வம், கே..செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேல் எம்.எல்.., கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.., நூர்முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை 6. 30 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை இரவு 8. 10 மணி வரை நடந்தது. பின்னர் வெளியே வந்த எம்.எல்.. கே.பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை குறித்து நிருபர்களிடம் கூறியதாவது,

உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் இடங்கள் குறித்து அதிமுக குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தினோம். இது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை தான். பேசசுவார்த்தை சுமூகமாக நடந்தது. இன்னும் தொடரவிருக்கும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எடுக்கப்படும். நல்லது நடக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

இதற்கிடையே .எம்.கோபு, முன்னாள் எம்.எல்..க்கள் ஜி.பழனிச்சாமி, சிவபுண்ணியம் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் குழு நேற்றிரவு 8 மணிக்கு போயஸ் கார்டனுக்கு பேச்சுவார்த்தை நடத்த வந்தது. அந்த குழு இரவு 8. 50 மணிக்கு வெளியே வந்தது.

அப்போது .எம்.கோபு கூறியதாவது,

ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நல்லபடியாகத் துவங்கி சுமூகமாக நடந்தது. நாளை(இன்று) மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம். இறுதியில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நம்புகிறோம். அதிமுக வேட்பாளர் பட்டியில் வெளியிட்டுள்ளது ஒன்றும் புதிதன்று. அதனால் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றார்.

இந்நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.., துணை பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட விரும்பும் உள்ளாட்சித் தேர்தல் இடங்கள் குறித்த மனுவை அதிமுக குழுவிடம் கொடுத்தனர்.

 

 

 

அவமதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலைக்கு பாலாபிஷேகம் செய்த அதிமுக.வினர்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் அவமதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை சுத்தம் செய்த அதிமுக.வினர், சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

ராஜபாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தேவர் சிலை அவமதிக்கப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவியது. அதையடுத்து நகரின் முக்கிய பகுதிகளில் இருந்த தேவர் மற்றும் அம்பேத்கார் சிலைகளுக்கு கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் பி..சி.ஆர். சாலை மற்றும் வடக்கு மலையம்பட்டி பகுதிகளில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகள் மீது அவமதிப்பு செய்யப்பட்டது. இந்த தகவல் அறிந்த .தி.மு.. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காலையில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து .தி.மு.. தலைமை நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தபின் அவமதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலைகளை சுத்தம் செய்தனர். அதன்பின் எம்.ஜி.ஆர். சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கினர். அதன்பின் இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து .தி.மு..வினர் கூறியதாவது, .தி.மு.. அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் எண்ணத்தில் இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டுள்ளனர். தமிழக முதல்வர் மற்றும் கட்சி தலைமை நிர்வாகிகளின் உத்தரவின்பேரில் அமைதி காத்து வருகிறோம், என்றனர்.

 

 

விதையை விதைப்பவர்கள் வினையை அறுவடை செய்தே ஆக வேண்டும்- போலீசாருக்கு கருணாநிதி எச்சரிக்கை

சென்னை: வினையை இன்றைக்கு விதைப்பவர்கள் ஒரு நாள் வினையை அறுவடை செய்தே ஆக வேண்டும் என்பது மட்டும் உண்மை. காவல்துறையினருக்கும் சேர்த்துத்தான் இதைச் சொல்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2006ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் சில இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்தவர் ஜெயலலிதா. மக்களை மேலும் ஏழைகளாக்கும் நடவடிக்கைதான் இலவசத் திட்டங்கள் என்றார்.

ஆனால், திமுக ஆட்சியில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் மாதந்தோறும் 20 கிலோ அரிசி வழங்கப்படும் என்பதை விரிவாக்கி, மாதம் அந்த 20 ரூபாயையும் தர வேண்டியதில்லை, அதையும் நாங்கள் இலவசமாகத் தருகிறோம் என்று கூறி, அதை நடைமுறைப்படுத்தியிருக்கிறது அதிமுக அரசு. பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம். கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 6 மாதங்களுக்கு ரூ.6000 வழங்கும் திட்டமும் அப்படித்தான். உதவித் தொகையை அதிகப்படுத்தி அதிமுக அரசு தொடர்கிறது.

ஏழையெளியவர்களுக்கு இலவசமாக வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம், இலவச சமையல் எரிவாயு திட்டம் ஆகியவற்றை அதிமுக அரசு தொடரவில்லை. திமுக ஆட்சியின் வழியில் இலவசத் திட்டங்களை வழங்க முன்வந்த ஜெயலலிதா அரசு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, லேப்டாப், ஆடு மாடுகள் என்று தாங்களும் இலவசமாக வழங்க முன்வந்துள்ளார்கள்.

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான திட்டம், வேறு பெயரில் தொடரும் என்று சொல்லியிருக்கிறார்கள். திமுக அரசின் மற்றொரு திட்டம் 108 ஆம்புலன்ஸ் திட்டம். அந்தத் திட்டமும் இந்த ஆட்சியில் வேண்டா வெறுப்பாக நடத்தப்படுகிறது. அதிமுக அரசு மூடுவிழா நடத்த முதலிலே முயற்சி எடுத்த திட்டம் சமச்சீர் கல்வித் திட்டம். திருத்தம் செய்கிறோம் என்ற பெயரால் புத்தகங்களில் அதிமுக ஆட்சியினர் செய்த மாறுதல்கள் திமுக மீதான காழ்ப்பினை உணர்த்துவதாகவே இருந்தன.

திமுக ஆட்சியில் எழுப்பப்பட்டது தலைமைச் செயலகக் கட்டிடம், புதிய சட்டப் பேரவை வளாகம். தலைமை செயலகம் குறித்து விசாரணைக் கமிஷனை அறிவித்து விட்டு, அவரே அந்தக் கட்டிடத்தில் உயர் சிகிச்சைக்கான மருத்துவமனையை நிறுவப்போவதாக அறிவித்திருக்கிறாரே, அதற்கு மட்டும் விசாரணைக் கமிஷன் பரிந்துரைக் காக ஏன் காத்திருக்கவில்லை?.

பாதிக்கப்பட்ட மற்றொன்று செம்மொழி மைய அலுவலகம், பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம். இதன் கதி அதிமுக ஆட்சியிலே என்ன ஆயிற்று என்றே தெரியாத நிலை. அதுபோலவே மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், ஜெயலலிதா மோனோ ரயில் திட்டம் அறிவித்திருக்கிறார்.

வீடு வழங்கும் திட்டம், சட்டமன்ற மேலவை ஆகியவற்றுக்கு மூடு விழா நடத்திய பெருமை ஜெயலலிதாவையே சேரும். அதுபோலவே செம்மை நெல் சாகுபடி முறைக்கு ராஜராஜன் 1000 என்று என்னால் பெயரிடப்பட்டது. அந்தப் பெயரும் மாற்றப்பட்டுவிட்டது.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை பழைய நிலைக்கே கொண்டு வரும் மசோதாவைக் கொண்டுவந்து பேரவையிலே நிறைவேற்றி யிருக்கிறது. இது மாணவர்களின் எதிர்காலத்தையும், உயர் கல்வியின் தரத்தையும் நாசமாக்கும் முயற்சி. திருமழிசையில் துணை நகரம் ஒன்றினை அமைக்கப் போவதாக பேரவையில் ஜெயலலிதா வழக்கம் போல 110வது விதியின் கீழ் அறிவித்தார். அந்தத் திட்டம் பற்றி நான் விவரமாக எழுதியிருக்கிறேன். அதிகாரிகளை அழைத்து நான் எழுதியிருப்பதெல்லாம் உண்மைதானா என்று கேட்டறிந்த பிறகு எதுவும் பதில் கூறாமலேயே விட்டுவிட்டார்கள்.

தமிழக அரசின் சார்பாக 5 வகையான திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், என்னுடைய அன்னையார் பெயரிலே உள்ள அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண உதவித் திட்டம் என்பதை மட்டும் ஜெயலலிதா அவசர அவசரமாக மாற்றி, டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டத்துடன் இணைத்துவிட்டார்.

மேலும், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மீண்டும் சித்திரை மாதம் முதல் தேதிக்கு மாற்றிட பேரவையில் மசோதா ஒன்றினை தாக்கல் செய்து, குரல் வாக்கின் மூலமாக நிறைவேற்றியிருக்கிறார். சேலத்தில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட்டிருந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மூடு விழா நடத்தியிருக்கிறார்.

நான்கு மாத கால அதிமுக ஆட்சியில் இப்படித்தான் காரியங்கள் நடைபெற்று வருகின்றன. அதிமுக ஆட்சியாளர்கள் சிந்திப்பதெல்லாம் திமுக முன்னோடிகளையெல்லாம் பொய் வழக்கிலே எப்படி சிக்க வைத்து கைது செய்து சிறையிலே அடைப்பது என்ற கொடூரமான எண்ணம்தான். ஒரு வழக்கிலே நீதி மன்றம் ஜாமீன் வழங்கினால், வேறு ஏதாவது ஒரு வழக்கினை அவர்கள் மீது தொடுத்து தொடர்ந்து சிறையிலே வைப்பதற்கான முயற்சியிலே காவல் துறையினரின் துணையோடு செயல்படுகிறார்கள்.

வினையை இன்றைக்கு விதைப்பவர்கள் ஒரு நாள் வினையை அறுவடை செய்தே ஆக வேண்டும் என்பது மட்டும் உண்மை. காவல்துறையினருக்கும் சேர்த்துத்தான் இதை சொல்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 

 

'எக்ஸ்க்யூஸ் மீ' நான் டயட்டில் இருக்கிறேன்: அஞ்சலி

 

  

'அங்காடித் தெரு' அஞ்சலி எடையைக் குறைக்க டயட்டில் உள்ளாராம். வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியாம் இது.

அங்காடித் தெரு புகழ் நடிகை அஞ்சலிக்கு அண்மையில் எடை கூடிவிட்டது. இதனால் அவர் வருத்தம் அடைந்தார். இப்படி எடைக் கூடிவிட்டதே என்று நினைத்த அஞ்சலி தற்போது டயட்டில் உள்ளார். அரிசி உணவு வகைகளைச் சாப்பிடுவதால் தான் எடை கூடுகிறது என்று அவர் கருதினார்.

இதையடுத்து தற்போது அரிசி உணவை தொட்டுக்கூட பார்ப்பதில்லை. வெறும் சப்பாத்தியைத் தான் சாப்பிடுகிறார். இது தவிர ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சியும் செய்து வருகிறார்.

விரைவில் ஸ்டைலான, ஸ்லிம்மான அஞ்சலியைப் பார்க்கலாமாம்...'குண்டாகாமல்' பார்த்துக்கங்க அஞ்சலி!

 

 

 

ரா ஒன்னை இந்தியாவின் பரபரப்புக்குரிய படமாக்கிய ரஜினி!!

 

'ஒரே நிமிடம்... ஜஸ்ட் ஒரே காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கப் போகிறார்' - இந்த ஒரு செய்தி இத்தனை நாளும் தென்னிந்திய மக்களால் பெரிதாக பேசப்படாமல் இருந்த ஷாரூக்கானின் ரா ஒன் படத்தை, தலைப்புச் செய்திளில் இடம்பெறச் செய்துவிட்டது.

இதுவரை இந்தப் படத்தை ரஜினியின் ரோபோ காப்பி என்று பேசி வந்த வட இந்திய ரசிகர்களோ, ரஜினியே நடிக்கிறார் என்று தெரிய வந்ததும் மிக ஆவலுடன் அந்த செய்தி உண்மையாகும் தருணத்துக்காக காத்திருக்கின்றனர்.

அதுதான் 'ரஜினி மாஜிக்'!

வட இந்திய செய்தித் தாள்கள் மற்றும் இணையதளங்கள் இப்படித்தான் தொடர்ந்து சில தினங்களாக எழுதிவருகின்றன.

'ரா ஒன் படத்தை நம்பர் ஒன்னாக்கிவிட்டார் ரஜினி' என குறிப்பிட்டுள்ளது இந்துஸ்தான் டைம்ஸ். 'ரா ஒன்னை ரெட் ஒன்னாக்கிவிட்டார் சூப்பர் ஸ்டார்' என புகழாரம் சூட்டியுள்ளார் பிரபல சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை.

வட இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தப் படத்தில் ரஜினி நடித்தால், ரோபோவின் காப்பி என்ற இமேஜ் நிச்சயமாக மாறிவிடும் என்கிறார் பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ்.

சரி... இது சாத்தியம்தானா...ரஜினி உண்மையில் நடிக்கப் போகிறாரா ரா ஒன்னில்?

இந்தக் கேள்விதான் பெரும்பாலான ரசிகர்கள் மனதில்.

ரா ஒன் படத்தின் தயாரிப்பாளர் ஈராஸ் இன்டர்நேஷனல். இவர்கள்தான் ரஜினியின் ராணா படத்தை சௌந்தர்யாவுடன் இணைந்து தயாரிக்கிறார்கள். ஷாரூக்கான் ஏற்கெனவே ரஜினியிடம் 'இந்தக் காட்சியில் நடித்துத் தந்தால், படத்துக்கே அது ஒரு பெரிய கவுரவமாக இருக்கும்' என கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு ரஜினி என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை.

ஈராஸ் நிறுவனத்தினரும் இதை தங்கள் விருப்பமாக தெரிவித்துள்ளனர். ஷாரூக்கானுக்காக இல்லாவிட்டாலும், ராணா தயாரிப்பாளர்கள் நலன் கருதியாவது ரஜினி இதைச் செய்யக்கூடும் என்பதுதான் திரையுலகில் பேச்சாக இருக்கிறது.

மருத்துவமனையிலிருந்து திரும்பியுள்ள ரஜினி, பூரண ஒய்வுக்குப் பிறகு கேமராவுக்கு முன் நிற்கும்போது, அந்த அதி உயர்மின் வெளிச்சம் அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும் இந்த ஒரு நாள் ஷூட் பயன்படும் என்று திரையுலகினர் சிலர் தெரிவித்தனர்.

இன்னொரு பக்கம், விநியோகஸ்தர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர், ரஜினி நடிக்கிறாரா இல்லையா என்பதைப் பார்த்த பிறகு இந்தப் படத்தை வாங்க. ரஜினி நடித்தால் தென்னிந்திய உரிமை பெரும் விலைக்குப் போகும் என்பதால், படத்தை நேரடியாக ஈராஸின் துணை நிறுவனமான அய்ங்கரனே ரிலீஸ் செய்யத் தயாராக உள்ளது.

இவை எல்லாமே ரஜினி சொல்லப்போகும் ஒற்றை வார்த்தை பதிலைப் பொறுத்து இருக்கிறது!

 

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மதுரையில் செப். 22ல் ராமதாஸ் ஆர்ப்பாட்டம்

 

 

சென்னை: பரமக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் செப்டம்பர் 22ம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆர்ப்பாட்டம் நடத்துவார் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், அதில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளையும், நாளை மறுநாளும் பாமக சார்பில் 2 நாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மேலும் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் செப்டம்பர் 22ம் தேதி மதுரையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

 

காலையில் 'அழுது' கொண்டே தொடங்கும் பெண்களின் வாழ்க்கை இரவு உறங்கும் வரையும் முடிவதில்லை. அந்த அளவிற்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நெடுந்தொடர்கள் பெண்களை கட்டிப் போட்டு, இல்லை இல்லை அடிமையாக்கி வைத்திருக்கிறது.

தொலைக்காட்சிக்கு அடிமையானவர்கள் போதைப் பொருள்களுக்கும் அடிமையானவர்கள் போன்றுதான் நடந்துகொள்கிறார்கள். ஆனால் தொலைக்காட்சியானது போதைப்பொருளை விட கொடூரமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. மனிதனின் மனதை பாழாக்கி வன்முறை மீது நாட்டம் கொள்ளவைத்து நாட்டையும், சமுதாயத்தையும் அது அழிக்கின்றது.

தொலைக்காட்சியானது வளர்ந்து வரும் தலைமுறையினர் மனநிலையை மட்டுமின்றி உடல் நலனையும் வெகுவாகப் பாதிக்கின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் எடுத்த கணக்கெடுப்பு ஒன்றின்படி ஒரு குழந்தை ஒவ்வொருவாரமும் சராசரியாக 1680 நிமிடங்கள் தொலைக்காட்சியை பார்ப்பதில் செலவழிக்கிறது. ஆனால் தன்பெற்றோருடன் பயனுள்ள விஷயங்களைப் பேச வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே செலவிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டொன்றுக்கு 900 மணி நேரத்தை சிறுவர்கள் பள்ளிகளில் கழிக்கின்றனர். ஆனால் அவர்கள் 1023 மணி நேரங்கள் தொலைக்காட்சி முன்பு செலவிடுகின்றனர். உயர்நிலைப்பள்ளியை முடிக்கும் முன்பு 19 ஆயிரம் மணி நேரத்தை அவர்கள் தொலைக்காட்சி முன்பு செலவிடுவதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

இதயநோய் ஆபத்து

அளவுக்கதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் பள்ளி மாணவர்களால் குறைந்த பட்ச அளவு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் கூட ஈடுபட முடியவில்லை. தொலைக்காட்சிப் பெட்டியின் முன் தவம் கிடக்கும் 5 வயதில் இருந்து 8 வயதுக் குழந்தைகளுக்கு இதய நோய்களில் ஏதாவது ஒன்று தாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. 1960 களில் இருந்த தொகையைவிட 1990 களில் மிதமிஞ்சிய உடல் பருமன் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு உடல் ரீதியாக எவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் முடங்கிக் கிடப்பது தான் முக்கிய காரணம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பாதிக்கும் வன்முறை காட்சிகள்

18
வயதை அடைவதற்குள் ஒரு சிறுவன் தொலைக்காட்சி வழியாக இரண்டு இலட்சம் வன்முறைக் காட்சிகள் பார்த்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக ஒரு குழந்தை 11 வயதை அடைவதற்குள் 8,000 கொலைகளையும் 10,000 வன்முறைகளையும் தொலைக்காட்சி வழியே பார்க்க நேரிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் 36,000 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி வன்முறையை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும், செயலில் இறங்குவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

தொலைக்காட்சியை பார்க்கும் சிறுவர்கள் தாங்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சியையும் தமது ஆழ் மனதில் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்றும் இதனடிப்படையில் அவர்கள் செயல்களில் இறங்குவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிஜத்திற்கும், நிழலுக்கும் இடையே எவ்வித வேறுபாட்டையும் இவர்களால் காணமுடிவதில்லை என்றும், தொலைக்காட்சி ஏற்படுத்திய பாதிப்புகளால் வாழ்க்கை பயங்கரமானதாகவும் இருள் சூழ்ந்ததாகவும், கவலைக்குரியதாகவும் ஆகிவிடுவதாக பெருவாரியான குழந்தைகள் கருதுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தவறான முன்னுதாரணம்

பெரியவர்கள் சண்டை போட்டுக் கொள்வதையும், மனமுடைந்து கண்ணீர் விடுதல், கொலை, பாலியல் உறவு கொள்வது மற்றும் வன்முறைகள் போன்றவற்றை குழந்தைகள் தொலைக்காட்சிகளில் காண்கிறார்கள். பெரியவர்களின் பொறுப்பற்ற ஒழுக்கக் கேடான வாழ்க்கைகளை தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் பார்க்கும் குழந்தைகள் அவர்களை தவறுகளுக்கு முன்னுதாரணமாக்குகிறார்கள். தொலைக்காட்சியில் சித்தரிக்கப்படும் போலியான நிகழ்வுகள் உண்மையான வாழ்வில் நடப்புகளாக பசுமரத்து ஆணி போல பிஞ்சு நெஞ்சங்களில் பதிவாகின்றன. இதனால் குழந்தைகள் தங்களின் கள்ளம் கபடமற்ற தன்மையை இழக்கின்றனர். அவர்களின் எதிர்காலம் பாழ்படும் அளவிற்கு தொலைக்காட்சி வழியே நஞ்சு விதைகள் விதைக்கப்படுகின்றன என்பதே உண்மை.

 

 

 

பரமக்குடி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தே.மு.தி.க. நிதியை வாங்க மறுப்பு

பரமக்குடி: பரமக்குடி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தே.மு.தி.., நிதியை வாங்க மறுத்து திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினமான செப்டம்பர் 11 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், முத்துராமலிங்கபுரம் பள்ளப்பசேரி கிராமத்தைச் சேர்ந்த பழனிக் குமார் தங்கவேல் என்ற தலித் மாணவனை ஒரு கும்பல் படுகொலை செய்தது.

மேலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியனை போலீசார் கைது செய்தனர். இதனால் தென் மாவட்டத்தில் பல இடங்களில் கலவரம் வெடித்தது. இதில் பரமக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர்.

அவ்வாறு, துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 17 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பரமக்குடி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ 25 ஆயிரம் வழங்கப்படும் என தே.மு.தி.. அறிவித்திருந்தது.

இக் கட்சியின் பொருளாளர் சுந்தரராஜன், மாவட்ட செயலாளர் ஜின்னா தலைமையிலான குழு, பரமக்குடி அடுத்த பார்த்திபனூர் சென்று, பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ 25 ஆயிரம் கொடுக்க முயன்றனர்.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் பரமக்குடி கலவரம் குறித்து தே.மு.தி.. சார்பில் பேசிய பண்ருட்டி ராமசந்திரன், கலவர சம்பவம் நீதி விசாரணை தேவையில்லை என கருத்து தெரிவித்தார். இதனால் தாங்கள் தேமுதிக நிதியை பெற விரும்பவில்லை என கூறி நிதியை பெற மறுத்து விட்டனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சமாதான பேச்சுவார்த்தை தேமுதிக நிர்வாகிகள் நடத்தியும் அவர்கள் அந்த பணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால் தே.மு.தி..-வினர் திரும்பி சென்றனர்.

 

 

 

திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார்

 

திருச்சி: திருச்சி மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. என்னிடம் நகை, பணம், வீடு என பலவற்றை மோசடி செய்துள்ளார் பரஞ்சோதி. எனவே அவரை வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று பரஞ்சோதியின் 2வது மனைவி ராணி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

திருச்சி மேற்கு தொகுதிக்கு அக்டோபர்13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் பரஞ்சோதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பரஞ்சோதி கடந்த முறை ஸ்ரீரங்கம் தேர்தலில் போட்டியிட்டவர். இந்த முறை கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்காக அத்தொகுதியை அவர் விட்டுக் கொடுத்தார். மேலும் ஜெயலலிதாவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்.

எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வருபவர் பரஞ்சோதி. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுக உடைந்தபோது அவர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஜெயலலிதா அணியில் இணைந்து செயல்பட்டார். தீவிர ஜெயலலிதா விசுவாசி. இதற்குப் பரிசளிக்கும் வகையிலேயே அவருக்கு திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார் ஜெயலலிதா.

இந்த நிலையில் பரஞ்சோதியின் 2வது மனைவி ராணி பரபரப்புப் புகார்களை அடுக்கி ஜெயலலிதாவுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், எனது கணவர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. தனது முகல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு என்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக என்னிடமிருந்து 70 பவுன் நகைகளைப் பெற்றார். மேலும் எனது வீடு, ரூ. 10 லட்சம் பணம் ஆகியவற்றையும் அவர் மோசடியாக பெற்றுக் கொண்டார்.

இப்படிப்பட்ட ஒருவரை திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளராக நிறுத்தக் கூடாது. எனவே அவரை வேட்பாளராக அறிவித்ததை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் ராணி.

ராணியின் இந்த புகார்களால் திருச்சியிலும், அதிமுக வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

தேமுதிக எம்.எல்.ஏ. வீட்டை முற்றுகையிட்டு மல்லர் கழகத்தினர்ஆர்ப்பாட்டம்

மதுரை: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை தேவையில்லை என்று பேசிய தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் தேமுதிக எம்.எல்.. சுந்தரராஜன் வீட்டை முற்றுகையிட்டு மல்லர் கழகத்தி்னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பரமக்குடி சம்பவம் தொடர்பாக சட்டசபையில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை தேவையில்லை என்று பேசியதாக தாழ்த்தப்பட்ட அமைப்புகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் மதுரை மத்திய தொகுதி தேமுதிக வேட்பாளர் சுந்தரராஜன் வீட்டை மல்லர் கழகம் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

 

 

 

ஹாலிவுட் பாணியில் உருவாகும் விஸ்வரூபம் : கமலுக்கு இன்னொரு மைல்கல்!

 

கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் விஸ்வரூபம் ஹாலிவுட் பாணியில் தயாராகிறது. இந்த படம் கமலுக்கு இன்னொரு மைல் கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் வந்து கலக்கினார். அந்த படத்தைப் பார்த்தவர்கள் அடேங்கப்பா இதெல்லாம் கமலால் மட்டுமே முடியும் என்று ஆச்சரியப்பட்டனர். தமிழ், தெலுங்கு, இந்தி என்று 3 மொழிகளிலும் வசூலில் சாதனை படைத்த படம்.

தற்போது தயாராகி வரும் விஸ்வரூபம் தசாவதாரத்தின் சாதனையை முறியடித்துவிடும் என்று பேசப்படுகிறது. கமல் படங்களில் நாயகன், தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் போன்ற பல படங்களை மைல்கற்கள் என்று கூறலாம். ஆனால் விஸ்வரூபம் புதிய மைல்கல்லாக அமையும் என்றும், தொழில்நுட்ப ரீதியாக தமிழ் திரையுலகில் இப்படி ஒரு படத்தை யாருமே எடுத்ததில்லை என்று பேசப்படும் என்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தெரிவித்தனர்.

ஹாலிவுட்டில் தான் படத்தை துவங்கும் முன்பு அதன் திரைக்கதை புத்தகம் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். அதே பாணியில் விஸ்வரூபம் படத்தின் திரைக்கதை புத்தகம் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், ஆர்ட் டைரக்டர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் படத்தின் நாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கவுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சேலை கட்ட மறுக்கும் அமலா பால்!

நடிகை அமலா பாலுக்கு மாடர்ன் டிரஸ் தான் பிடிக்குமாம். அதனால் எந்த விழாவுக்கு வந்தாலும் மாடர்ன் டிரஸ் தான். சேலையில் வர அவர் விரும்புவதில்லையாம்.

மைனா புகழ் அமலா பால் எந்த விழாக்களுக்கு வந்தாலும் மாடர்ன் டிரஸ்ஸில் தான் வருகிறார். அவரைப் புடவையில் பார்க்க வேண்டும் என்றால் திரையில் மட்டுமே அது சாத்தியம். காரணம் அவருக்கு சேலை கட்டுவதில் இஷ்டம் இல்லையாம், அது கஷ்டமான வேலை என்கிறார்.

அழகாக இருக்கிறீர்கள், லட்சணமாக தழையத் தழைய அழகாக புடவை அணிந்து வரலாமே என்று கேட்டால், விழாக்களுக்கு புடவையில் வருவது கஷ்டம். புடவை கட்ட நேரமாகும். அதனால் தான் விழாக்களுக்கு நான் புடவை கட்டி வருவதில்லை என்றார்.

யாராவது விழா ஏற்பாட்டாளர்கள் அம்மணியை புடவையில் வரச் சொன்னாலும் கூட ஸாரிங்க என்று 'சாரி' கட்ட மறுத்து விடுகிறாராம்.

தெய்வத் திருமகள் படத்தில் வண்ண வண்ண புடவைகளில் வந்து அசத்தினாரே, நிஜத்திலும் அப்படி வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

என்ன பண்றது, கொசுவம் வைத்து சேலை கட்ட அமலாவுக்கு கஷ்டமா இருக்குதாமே

 

சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்ளர் விண்கலம்!

 

வாஷிங்டன்: பூமி சுற்றி வரும் சூரியனை விட சிறிய வடிவிலான 2 சூரியன்களையும் அதை சுற்றிவரும் கிரகத்தையும் குறித்த படங்களை கெப்ளர் விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

நாசா மூலம் விண்ணில் ஏவப்பட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் கெப்ளர் விண்கலம் அவ்வப்போது விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தும் படங்களை அனுப்புவது வழக்கம். கெப்ளர் விண்கலம் மூலம் பூமிக்கு அருகில் அல்லது தொலைவில் உயிர்வாழ ஏற்ற கிரகம் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறியவே அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் கெப்ளர் விண்கலம் அனுப்பியுள்ள படங்கள் மூலம், ஒரு புதிய கிரகத்தையும் 2 சூரியன்களையும் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து 200 ஓளியாண்டு தூரத்தில் உள்ள இந்த கிரகத்திற்கு கெப்ளர் 16பி என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

இந்த கெப்ளர் 16பி கிரகத்தில் பாதியளவு பாறையும், பாதியளவு வாயுக்களும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இங்கு உயிரினம் வாழ முடியாத நிலையில் உள்ளதாக தெரிகிறது. கிரகத்தின் அளவு ஏறக்குறைய சனிக்கிரகத்தின் அளவையும், 2 சூரியன்களும், பூமியின் சூரியனை விட சிறியவை எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அதில் 1 சூரியன் பூமியின் சூரியனின் 69 சதவீத அளவையும், மற்றொன்று 20 சதவீத அளவையும் கொண்டுள்ளதாக தெரிகிறது. சூரியக் குடும்பத்தில் உள்ளது போல, சூரியன்கள் தன்னை தானே சுற்றிக் கொண்டே, அந்த கிரகத்தையும் சுற்றி வருகின்றன. இதனால் மூன்றிற்கு இடையே அவ்வப்போது கிரகணங்கள் ஏற்படுகிறது.

ஆனால் இம்மூன்றிற்கும் இடையேயான இயக்க வேகத்தை துல்லியமாக கணக்கிட முடியவில்லை. கெப்ளர் 16பி 2 சூரியன்களையும் சுற்றி வர 229 நாட்களை எடுத்து கொள்கிறது. வெள்ளி கிரகம் சூரியனை சுற்றி வர 225 நாட்களை எடுத்து கொள்கிறது.

கெப்ளர் ஆராய்ச்சியாளர் வில்லியம் புரூக்கி கூறுகையில், "சூரியக் குடும்பத்தை ஒத்த அநேக கிரகங்களும், சூரியன்களும் உள்ளது. அதில் சிலவற்றில் உயிர்வாழ தேவையான அம்சங்கள் அடங்கி இருக்கலாம் என்பதை கெப்ளர் அனுப்பியுள்ள படங்கள் மூலம் நிரூபணமாகிறது. அதன்மூலம் ஆராய்ச்சியாளர்கள் கடக்க வேண்டிய பாதை வெகுதொலைவு உள்ளது என தெரிகிறது", என்றார்.