அமெரிக்காவுக்கு அல் கொய்தா மட்டும் தான், ஆனால் இந்தியாவுக்கு...: ப. சிதம்பரம்
டெல்லி: அமெரிக்காவுக்கு அல் கொய்தா என்னும் ஒரு அச்சுறுத்தல் தான். ஆனால் இந்தியாவுக்கோ பல அச்சுறுத்தல்கள் உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
டெல்லியில் அனைத்திந்திய டைரக்டர்கள் ஜெனரல் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஜெனரல் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட ப. சிதம்பரம் பேசியதாவது,
டெல்லி மற்றும் மும்பை குண்டுவெடிப்புகள் நம் நாட்டு பாதுகாப்பு மற்றும் உளவுத் துறையின் பெயருக்கு ஏற்பட்ட கலங்கம். தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு புதிய யுக்தி தேவை. இரண்டு மாத காலத்தில் இரண்டு முறை தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளது நமக்கு அவமானம். இதற்காக மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு படைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
இந்த சம்பவங்களுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம், விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறோம். எந்த மாதிரி சூழ்நிலையில் இந்த தாக்குதல்கள் நடந்தன என்பதை எடுத்துக்கூறுவது நம் கடமை.
26/11 மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட 50 வகையான யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன. அயோத்தி தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகளை கொலை செய்ய திட்டமிட்ட சிமி அமைப்பின் சதி முறியடிக்கப்பட்டது.
அமெரி்க்கா உட்பட அனைத்து உலக நாடுகளும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க முடியவில்லை. இந்த ஆண்டு தொடங்கி கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 22 நாடுகளில் 279 தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தான் மோசமாக பாதிக்கப்பட்டன.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதத்தின் மையமாக உள்ளன. 5 முக்கிய தீவிரவாத அமைப்புகளில் 4 பாகிஸ்தானில் உள்ளன. அதில் 3 இந்தியாவைக் குறிவைக்கின்றது. ஜம்மு காஷ்மீர் மூலமாக இந்தியாவுக்குள் ஊடுருவுகின்றனர்.
நேபாலளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிகள் நடந்துள்ளன.
தீவிரவாத சவால் வல்லமைமிக்கதாக உள்ளது. அதை எதிர்க்க புதிய யுக்திகள் தேவைப்படுகிறது.
9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா அல் கொய்தா தான் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று கண்டறிந்து அந்த அமைப்புக்கு எதிராக் போர் துவங்கியது. இதற்காக உள்நாட்டு பாதுகாப்பு துறையைத் துவங்கி அதன் கீழ் 22 ஏஜென்சிகளைக் கொண்டு வந்தது. இது 2 போர்கள் செய்துள்ளது. மேலும் பல நாடுகளுக்கு படைகளையும் அனுப்பியுள்ளது.
ஆனால் நமக்கு ஒரு அச்சுறுத்தல் மட்டும் இல்லை பல உள்ளன. அவற்றை எதிர்க்கும் திறனை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கானப் பணிகள் நடந்து வருகின்றன. அதற்கு நேரம், பணம், மனித வளம், தொழில்நுட்பம் ஆகியவை தேவைப்படுகின்றது என்றார்.
இலவச லேப்டாப், ஆடு-மாடு, மிக்ஸி-கிரைண்டர் திட்டம்: எம்ஜிஆர் பாட்டு பாடி தொடங்கி வைத்த ஜெ!
திருவள்ளூர்: அறிஞர் அண்ணாவின் 103வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப், கிராம மக்களுக்கு ஆடு,மாடுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் இந்தத் திட்டங்களைத் தொடங்கி வைத்து ஜெயலலிதா பேசுகையில், இன்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 103 வது பிறந்த நாள்.
''இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்,
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்,
அந்த ஒளி காணலாம் சொன்ன வழி போகலாம்,
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்'' என்று, பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை அனுதினமும் கடைபிடித்து, நல்லாட்சி நடத்தி, ஏழை, எளிய மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற, பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியில்,
ஏழை, எளிய மக்களின் வளமான வாழ்விற்காக, நித்தம் நித்தம் புத்தம் புது திட்டங்களைத் தீட்டும் உங்கள் அன்புச் சகோதரி ஆகிய நான் பல்வேறு புதிய திட்டங்களை இன்று இந்த விழாவில் தொடங்கி வைப்பதில் உள்ளபடியே பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நான் மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றே, மக்கள் நலன் பயக்கும் மகத்தான ஏழு திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டேன். மேலும், ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட உங்கள் அன்புச் சகோதரி ஆகிய நான் உறுதி பூண்டுள்ளேன்.
என் அன்பிற்கினிய தமிழக மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வண்ணம், தினம் ஒரு திட்டத்தைத் தீட்டி செயல்படுத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில், உங்களுக்கு வாக்குறுதி அளித்தவாறு, இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், மாணவ, மாணவியர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் லேப்டாப் வழங்கும் திட்டம், கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வில் பொருளாதார மறுமலர்ச்சியை உருவாக்கும் வகையில் ஆடுகள் வழங்கும் திட்டம், வெண்மைப் புரட்சியை உருவாக்கும் வகையில், பால் உற்பத்தியைப் பெருக்கவும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் ஆகிய முன்னோடித் திட்டங்களை இன்று இந்த இனிய விழாவில் தொடங்கி வைக்க உள்ளேன்.
இன்று, மக்களுக்குப் பயன்படும் வகையில் இவ்வாறு வழங்கப்படும் பொருட்களை, 'இலவசம்' என்று ஒரு சிலர் கொச்சைப்படுத்துகின்றனர். வாக்களித்த மக்களுக்கு, இவ்வாறு வழங்கப்படுகின்றது என்றும், இவை இலவசங்கள் என்றும், எனவே, இவ்வாறு வழங்கப்படுவதை தடை செய்ய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்திற்கே சென்று கூட வழக்கு தொடுத்துள்ளனர்.
ஏழை, எளிய மக்கள் வாழ்வில் வளம் பெறவும், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டியும், மக்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று, தங்கள் சொந்தக் கால்களிலேயே நிற்பதற்கு வழி வகை செய்யும் இந்தத் திட்டங்களை எல்லாம் இலவசத் திட்டங்கள் என்று கொச்சைப்படுத்துவதை பொருளாதாரம் தெரிந்த எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இன்று துவக்கி வைக்கப்படும் கறவை மாடுகள் வழங்கும் திட்டம், மக்கள் வாழ்வில் ஏற்றம் அளிக்கும் ஒரு உன்னதத் திட்டம் ஆகும். இது குடும்ப அளவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டு ஒன்றுக்கு 12,000 ஏழைப் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 5 ஆண்டுகளில் 60,000 பயனாளிகளுக்கு கறவைப் பசுக்கள் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் கலப்பின ஜெர்சி பசுக்கள் வழங்கப்படுவதால், அதிக பால் உற்பத்தித் திறன் ஏற்பட இது வழி வகை செய்கிறது. இவ்வாறாக, மாநிலத்தில் பால் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்குவதால், இந்தத் திட்டம் வெண்மைப் புரட்சிக்கு வித்திடும் ஒரு உன்னதத் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் 30 சதவீத பயனாளிகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால், ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள இந்தத் திட்டம் வழி வகை காண்கிறது.
''சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போல வைத்து உன்னைக் காப்பது என் பாடு'' என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடியபடி, பயனாளிகள், இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்படும் கறவைப் பசுக்களை பாதுகாத்து, அதன் மூலம் தங்கள் வாழ்வில் வளம் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இதே போன்று தான், ஏழைகளின் வாழ்வில் ஏற்றத்தை உருவாக்கும் மற்றொரு திட்டம் ஆடுகள் வழங்கும் திட்டம் ஆகும். ஏழ்மையிலும் ஏழ்மையாக உள்ளவர்களே இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தத் திட்டத்திலும் 30 சதவீத பயனாளிகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினராக இருப்பர். ஏழ்மையிலும் ஏழ்மை நிலையில் உள்ள பயனாளிகள் தங்கள் ஏழ்மை நிலையில் இருந்து விடுபட்டு, பொருளாதார சுதந்திரம் அடைந்திட இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது. இந்தத் திட்டத்தின் பயனாளிகள், ஒன்று, இரண்டு ஆண்டுகளிலேயே, தமது சொந்தக் கால்களில் நிற்கும் பொருளாதார வலிமையை இந்தத் திட்டம் பெற்றுத் தந்திடும்.
மாணவ, மாணவியர் உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையிலும், மேல்நிலைப் பள்ளிகளில் இடை நிற்றலைத் தடுக்கும் பொருட்டும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு 1,500 ரூபாயும், மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு 1,500 ரூபாயும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு 2,000 ரூபாயும், ஊக்கத் தொகையாக வழங்கும் திட்டத்தையும் இன்று தொடங்கி வைக்கிறேன்.
அறிவுசார் மாணவ சமுதாயத்தை உருவாக்கும் ஒரு புரட்சிகரமான, இந்தியாவிற்கே வழி காட்டும் முன்னோடித் திட்டம், மடிக் கணினி வழங்கும் திட்டம் ஆகும். மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் இந்த மடிக் கணினி அவர்களை ஒரு புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் தலை வாசலாக அமையும். தமிழ்நாட்டு மாணவ, மாணவியர் மற்ற எந்த மாநில மாணாக்கர்களையும் விட, கல்வியில் தேர்ந்து, அறிவில் சிறந்து விளங்கிட இந்தத் திட்டம் பயன் அளிக்கும்.
இல்லத்தரசிகளின் இன்னல் தீர்க்கும் இன்னொரு முத்தான திட்டம் தான், மகளிருக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டம். இந்தத் திட்டத்தையும் இன்று நான் தொடங்கி வைக்கிறேன். இன்று நான் வழங்கும் மிக்ஸி மற்றும் கிரைண்டர், சமையல் அறையில் நாளும் உழன்று கொண்டிருக்கும் இல்லத்தரசிகளின் வேலைப் பளுவையும், நேரத்தையும் வெகுவாகக் குறைக்கும். இந்த அரிய நேரத்தை, ஆக்கபூர்வமான வழிகளில், அதாவது, குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலோ, அல்லது தம் உள்ளத்தை செழுமைப்படுத்தும் நடவடிக்கைகளிலோ, அல்லது சமுதாயத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலோ இல்லத்தரசிகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும். அது போலவே, வசதி பெற்றவர்கள் குளிர்சாதன வசதியை ஏற்படுத்திக் கொள்ளும் போது, அந்த வசதியைப் பெற இயலாத சாமானிய மக்கள் மின் விசிறி வசதியைப் பெறுவது நியாயமானதே ஆகும்.
உங்கள் அன்புச் சகோதரி ஆகிய எனது தலைமையிலான அரசு, பொருளாதார வளர்ச்சிக்கும், மனிதவள மேம்பாட்டிற்கும், தனி மனிதனின் அத்தியாவசியத் தேவைகளுக்கும் என பலப் பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. நீங்கள் அனைவரும் இந்தத் திட்டங்களின் பயன்களைப் பெற்று, உங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற வேண்டும் என்றார் ஜெயலலிதா.
நாவரசு கொலையாளி ஜான் டேவிட் விடுதலை மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம்
சிதம்பரம்: சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரின் மகன் நாவரசு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜான் டேவிட்டை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஜான்டேவிட் மருத்துவக் கல்வி பயின்றார். அங்கு சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரின் மகன் நாவரசு என்ற மாணவரும் மருத்துவக் கல்வி பயின்றார்.
இந்த நிலையில் ஜூனியரான நாவரசை சீனியரான ஜான் டேவிட் கொலை செய்து அவரது உடலை பல துண்டுகளாக வெட்டினார். இந்த வழக்கில் 11.3.98 அன்று ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜான் டேவிட் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஜான் டேவிட்டை விடுதலை செய்யுமாறு கடந்த 5.10.01 அன்று உத்தரவிட்டது.
இதையடுத்து ஜான் டேவிட் விடுதலையை எதிர்த்து போலீஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 20.4.11 அன்று செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. தற்போது ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜான் டேவிட்டை விடுதலை செய்யக் கோரி அவரது தாயார் எஸ்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி. நாகப்பன், எம். சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது எஸ்தர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், இந்த பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இருப்பதால், மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். மனுவையும் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அவதூறு வழக்கு: சிறையிலேயே பொன்முடி மீண்டும் கைது!
கடலூர்: நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக பதிவு செய்யப்பட்டுள்ள புதிய மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நில அபகரிப்பு வழக்கில் பொன்முடி கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது ஜாமீன் மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
இந் நிலையில், கடந்த 5.6.2011 அன்று திருவாரூரில் நடந்த தி.மு.க. நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய பொன்முடி, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக விமர்ச்சித்து பேசியதாக அவர் மீது திருவாரூர் போலீசார் 3 பிரிவுகளில் அவதூறு வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக பொன்முடியை கைது செய்வதற்காக திருவாரூர் போலீசார் ஏற்கனவே 2 தடவை கடலூர் ஜெயிலுக்கு வந்தனர். ஆனால் கைது செய்யாமல் திரும்பி விட்டனர்.
இந் நிலையில் இன்று திருவாரூர் டிஎஸ்பிக்கள் ராஜேந்திரன், குருசாமி தலைமையில் 30 போலீசார் மீண்டும் கடலூர் வந்தனர். அவர்கள் ஜெயிலுக்கு சென்று அதிகாரிகளை சந்தித்துப் பேசிய அவர்கள் பின்னர் பொன்முடியை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவரை வேனில் ஏற்றி திருவாரூருக்கு அழைத்து சென்றனர். அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் மீண்டும் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
கண்மூடித்தனமாக பைக் ஓட்டாதே: அசாருத்தீன் மகனை எச்சரித்த உடற்கல்வி இயக்குனர்கள்
ஹைதராபாத்: கண்மூடித்தனமாக பைக் ஓட்ட வேண்டாம் என்று அசாருத்தீன் மகன் அயாஸுத்தீனை அவரது கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் எச்சரித்ததாக அக்கல்லூரியின் முதல்வர் ராமா ராவ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த பைக் விபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மொராதாபாத் எம்.பி.யுமான முகமது அசாருத்தீனின் இளைய மகன் அயாஸுத்தீன் படுகாயம் அடைந்தார், அவரது சகோதரியின் மகன் அஜ்மலுர் ரஹ்மான் மரணம் அடைந்தார்.
அயாஸுத்தீன் ஹைதராபாத்தில் உள்ள் அப்போலோ மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பல இடங்களில் எழும்புகள் முறிந்துள்ளன. அவரது மூளை, சிறுநீரகம் மற்றும் நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவரது இடது சிறுநீரக்ததி்ல் இருந்து ரத்தக் கசிவு நிற்காகததால் அதை நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.
அவரது சிறுநீரகப் பிரச்சனை மருத்துவர்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. விபத்து நடந்து சில மணி நேரத்திற்கு பிறகு தான் அயாஸுத்தீனை மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து நடந்தவுடன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அவர் இன்னும் சுயநினைவில்லாமல் தான் உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் குழு அவரைத் தீவிரமாக கண்காணித்து வருகின்றது.
அயாஸுத்தீன் புனித மேரி கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வேகமாக வண்டி ஓட்டுவதின் விபரீதங்கள் குறித்து கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்கள் அயாஸுத்தீனை எச்சரித்துள்ளனர் என்று அக்கல்லூரியின் முதல்வர் ராமா ராவ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
அயாஸுத்தீன் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் என்று தான் எங்களுக்குத் தெரியும். ஆனால் எங்கள் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்கள் டேனிகல் மற்றும் விஜய் பாஸ்கர் ரெட்டிக்கு அயாஸுத்தீன் வார இறுதி நாட்களில் வெளியே பைக்கில் சுத்துவது தெரிந்துள்ளது. கண்மூடித்தனமாக ஓட்டுவது குறித்தும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
எங்கள் கல்லூரி அரங்கில் அயாஸுத்தீன் விரைவில் குணமடைய பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினோம் என்றார்.
2ஜி வழக்கில் ப.சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்கக் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் சு.சாமி மனு!
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் ஒரு குற்றவாளியாக சேர்க்கக் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
நீதிபதி ஓ.பி.சைனியிடம் அவர் தாக்கல் செய்த மனுவில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அளித்த விளக்கத்தைப் பார்த்தால்,
2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாமல் விற்பது என்ற முடிவு மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு என்பதும், இதில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் தொடர்பு இருப்பதும் உறுதியாகிறது.
அப்போதைய நிதியமைச்சர் என்ற முறையில் ப.சிதம்பரத்துக்கும் இதில் தொடர்புள்ளது. இதனால் அவரையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்.
இந்த வழக்கில் என்னையும் சாட்சியாக சேர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை முழுமையானதாக இல்லை. ஸ்பெக்ட்ரம் விற்பனையில் சிதம்பரமும் சேர்ந்து தான் முடிவெடுத்தால் என்கிறபோது, அவரது பெயரை விட்டுவிட்டு சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது சரியல்ல.
வியட்நாம் அருகே கடலில் எரிவாயு தோண்ட இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு!
டெல்லி: தென் சீனக் கடலில் வியட்நாம் அருகே இயற்கை எரிவாயுவை தோண்டியெடுக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு சீன அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்த எதிர்ப்பு நியாயமற்றது, சட்ட விரோதமானது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
தனது கடலோரப் பகுதியில், தனது கடல் எல்லைக்குள் 2 இடங்களில் எரிவாயுவை தோண்டியெடுக்க இந்திய நிறுவனமான ஓ.என்.ஜி.சிக்கு வியட்நாம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கான பணிகளை ஓ.என்.ஜி.சியின் வெளிநாட்டுப் பிரிவான ஓ.என்.ஜி.சி. விதேஷ் நிகம் அமைப்பு தொடங்கவுள்ளது.
இந் நிலையில் சீன வெளியுறவுத்துறையிடமிருந்து மத்திய அரசுக்கு வந்துள்ள கடிதத்தில், எங்களிடம் அனுமதி பெறாமல் தென் சீனக் கடலில் ஓ.என்.ஜி.சி எரிவாயுவை தோண்டுவது சட்ட விரோதமானது என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்துக்கு சீன தூதரகம் மூலமாக இந்திய வெளியுறவுத்துறை சீன அரசுக்கு பதில் அனுப்பியுள்ளது. அதில், நாங்கள் எரிவாயுவைத் தோண்டுவது வியட்நாமின் கடல் எல்லைக்குள், அந்த நாட்டின் அனுமதியுடன் தான். இதற்கு உங்களிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. இதில் எந்த சட்ட விதியும் மீறப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
வரும் 16ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வியட்நாம் செல்ல உள்ள நிலையை இந்தப் பிரச்சனையைக் கிளப்பியுள்ளது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.
தென் சீனக் கடலின் 127, 128வது பிளாக்குகளில் தான் ஓ.என்.ஜி.சி. எரிவாயுவை தோண்டியெடுக்க உள்ளது. ஐ.நா. சபையின் கடல் எல்லை ஒப்பந்தப்படி இந்தப் பகுதி வியட்நாமைத் தான் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிழக்கு ஆசியப் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளில் வியட்நாமும் ஒன்று என்பதும், வியட்நாமின் பாராசல் தீவை 1974ம் ஆண்டில் சீனா ஆக்கிரமித்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இது தவிர ஸ்பார்ட்லி தீவு யாருக்கு சொந்தம் என்பதில் சீனாவுடன் வியட்நாம் மோதி வருவதும் முக்கியமான விஷயமாகும்.
2007ம் ஆண்டு ஸ்பார்ட்லி தீவு அருகே இங்கிலாந்தின் BP நிறுவனம் எரிவாயு தோண்டியெடுக்க இருந்த நிலையில், சீனாவின் எதிர்ப்பால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்தின் ஆசை
பு
தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியார் ரஜினி... ஒரு படத்திலாவது ரஜினிக்கு வில்லனாகி அவர் கையால் அடிவாங்க ஆசை! - அஜீத்
ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாகி, அவர் கையால் அடிவாங்க வேண்டும். அன்றுதான் என் சினிமா பயணம் பூர்த்தியடையும், என்று நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் மிகப்பெரிய ரசிகர், ரஜினியை கடவுளாகவே போற்றுபவர் நடிகர் அஜீத். ரஜினியைப் போலவே சினிமாவில் தனக்கென தனித்த கொள்கைகளை வைத்திருப்பவர்.
அவரது இந்த அணுகுமுறை புதிதாக ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளது, குறிப்பாக ரஜினி ரசிகர்களை. ரஜினிக்கு அடுத்து அஜீத்தை அவர்கள் அதிகம் விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அஜீத் அளித்துள்ள பேட்டி, அவர் எந்த அளவு ரஜினியை நேசிக்கிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
உங்கள் அடுத்த ஆசை என்ன அஜீத்திடம் கேட்டதற்கு அவர் இப்படிக் கூறியுள்ளார்:
எனக்கு நம்பர் ஒன், நம்பர் டூவில் ஈடுபாடில்லை. அந்த எண்ணங்களும் இப்போது மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் ரஜினி சாரைப் பார்க்கிறேன். அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் கவலை இல்லை. நான் ஏகலைவன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.
சூப்பர் ஸ்டாரை நான் தூரத்திலிருந்து பார்த்து ரசித்தபடி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன்.
ரஜினி சார் நடிக்க வேண்டும். அவர் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று என் சினிமா பயணம் ஒரு முழுமையடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். மங்காத்தாவின் மாபெரும் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்!"
கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு நடிகர்கள் கால்ஷீட் தர வேண்டாம்! - கேயார்
சென்னை: பெரிய நடிகர் நடிகைகள் கார்ப்பொரேச் நிறுவனங்களுக்கு உடனே கால்ஷீட் தந்துவிடுவதைப் பார்க்க முடிகிறது. தயவு செய்து இனி யாரும் இந்த நிறுவனங்களுக்கு கால்ஷீட் தர வேண்டாம். அப்படி தருபவர்கள் நன்றி கெட்டவர்கள், என்றார் தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறியதாவது:
இன்றைக்கு பல தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். வெகு சிலர்தான் பல ஆண்டுகள் இந்தத் தொழிலில் நிலைத்திருக்கிறார்கள். எங்களைப் போன்றவர்களுக்கு சினிமாதான் எல்லாமே. வேறு தொழில் தெரியாது.
ஆனால் இன்றைக்கு பல்வேறு துறைகளில் உள்ள கார்ப்பொரேட் நிறுவனங்கள் சினிமா பிரிவைத் தொடங்கி படமெடுக்க வருகிறார்கள். இவர்களுக்கு சினிமா பற்றியோ, கலை பற்றிய ஒன்றும் தெரியாது, அதுகுறித்த அக்கறையும் அவர்களுக்கில்லை.
இவர்களால்தான் சினிமா இன்று பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இப்போது ஏற்பட்டுள்ள தொழிலாளர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு இவர்களும் காரணம்.
கார்ப்பொரேட் நிறுவனங்கள் சினிமாவை விநியோகம் செய்யட்டும். அத்தோடு அவர்கள் வேலையை நிறுத்திக் கொள்ளட்டும். தனி நபர்கள் சினிமா தயாரிக்கட்டும். அதுதான் ஆரோக்கியமாக இருக்கும்.
தயவு செய்து கார்ப்பொரேட் நிறுவனங்கள் கேட்டதும் கால்ஷீட்டை தாராளமாகத் தரும் போக்கை நடிகர் நடிகைகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இனி யாரும் இந்த நிறுவனங்களுக்கு கால்ஷீட் தராதீர்கள். அப்படி மீறித் தந்தால், அதை விட நன்றிகெட்டதனம் எதுவும் இல்லை," என்றார் கேயார்.
இனி செல்போனில் பாடல்களை திருட்டுத் தனமாக பதிவு பண்ண முடியாது!
திரைப்பட இசைக் கலைஞர்கள் கஷ்டப்பட்டு பெரும் செலவில் உருவாக்கும் பாடல்களை யார் யாரோ இலவசமாக செல்போனில் பதிவு செய்து கொள்கிற அவலத்தை தடுக்கும் வகையில் புதிய சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
சவுத் இண்டியா டிஜிட்டல் மியூசிக் மேனேஜ்மென்ட் பி.லிட் நிறுவனம், சவுத் இண்டியா மியூசிக் கம்பெனி அசோசியேஷனுடன் இணைந்து இந்த இசைத் திருட்டுக்கு முடிவு கட்டும் வேலைகளில் இறங்கியிருக்கிறது.
இந்த நிறுவனம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்பட பாடல்கள், பக்தி பாடல்கள், கிராமிய பாடல்கள், கர்நாடக இசைப் பாடல்களை 50 முதல் 60 சதவீதம் வரை தயாரித்து வழங்கக்கூடியவர்களால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டது. 30 வருடங்களுக்கு மேலான சூப்பர் ஹிட் பாடல்களின் உரிமம் பெற்றுள்ள இந்நிறுவனம், 1957 இந்திய காப்புரிமை சட்டப்படி பாடல் இசையை பதிவு செய்ய உரிமம் பெறுவது அவசியம் என வலியுறுத்தியுள்ளது.
இதற்காக செல் மியூசிக் (CELL MUZIK) என்னும் நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க மற்றும் அறிமுக விழா சென்னையில் நடந்தது. தொடக்க விழாவில் இசையமைப்பாளர் தினா, பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன், பத்மஸ்ரீ சுதா ரகுநாதன், பாடலாசிரியர் விவேகா, முன்னாள் காவல் துறை அதிகாரி மாதவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுபோல திருட்டுத்தனமாக பாடல்களை பதிவு செய்து விற்கும் செல்போன் கடைகள் இனி மாதந்தோறும் 1250 செலுத்தி சந்தாதாரராக பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி பதிவு செய்யாமல் திருட்டுத்தனமாக விற்றால் 1957 இந்திய காப்புரிமை சட்டப்படி குற்றம்.
உரிமம் பெறாமல் பாடல்களை மொபைல் சிப்பில் பதிவு செய்பவர்களை கண்காணித்து தண்டிக்க முன்னாள் காவல் துறை அதிகாரி தலைமையில் ஒரு குழுவையும் நியமித்திருக்கிறது இந்த அமைப்பு.
அரசியலா... ம்ம்... அப்புறம் பதில் சொல்லட்டா? - சினேகா
ம்ம்... நான் கருத்து சொல்லி என்ன ஆகப் போவுது... அப்புறமா இதைப்பத்தி பேசலாமா?
-அரசியல் பிரவேசம் செய்யும் திட்டமுள்ளதாமே என்ற நிருபர்களின் கேள்விக்கு புன்னகை இளவரசி சினேகா அளித்த பதில் இது.
மதுரை அண்ணாநகரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஒரு புதிய மருத்துவ மையத்தை நடிகை சினேகா இன்று, ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
அவர் இந்த விழாவுக்கு வருகிறார் என்பதை அறிந்து ஏராளமான ரசிகர்கள் குவிந்துவிட்டனர். வழக்கம் போல சினேகா இவர்கள் பிடியில் மாட்டிக் கொள்ளவிருந்தார். ஆனால் அதற்குள் போலீசார் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து அவரை அழைத்துச் சென்றனர்.
பின்னர் நடிகை சினேகா நிருபர்களிடம் கூறுகையில், "மருத்துவ உலகில் ஓமியோபதி மருத்துவம் ஒரு சிறந்த மருத்துவ முறையாகும். ஆபரேசன் இல்லாமல் ஓமியோபதி மருந்துகள் மூலம் நோயை குணப்படுத்தலாம். இந்தியாவில் தகுதி வாய்ந்த மருந்துகள் ஓமியோபதியில் உள்ளன. மனிதர்களுக்கு ஓமியோபதி மருத்துவம் ஒரு வரபிரசாதமாக அமைந்துள்ளது," என்று ஒரு லெக்சரே கொடுத்துவிட்டார்.
முரட்டுக் காளை படத்தில் நடிப்பதற்காக மதுரைக்கு வந்த அவரை, இந்த திறப்பு விழாவுக்கு கூப்பிட்டதும் உடனே ஒப்புக்கொண்டாராம்.
தமிழில் விடியல் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருவதாகச் சொன்னவரிடம், "நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிறது. உங்களுக்குப் பின் வந்த சிலர் கூட அரசியல் பிரவேசத்துக்கு நாள் பார்க்கிறார்கள். உங்கள் ஐடியா என்ன? அரசியலில் குதிப்பீர்களா?" என்று கேட்க, அப்படியே 'ஷாக்' ஆகி நின்றுவிட்டார்!
உடனே சுதாரித்துக் கொண்டவர், "ஏங்க என்னை வம்புல மாட்டிவிடற ஐடியாவிலதான் வந்திருக்கீங்களா... படப்பிடிப்பு இடைவேளைல சும்மா வந்து போகலாமேன்னு வந்தேன். உண்மையில் எனக்கு அரசியல் பத்தி எந்த ஐடியாவும் இல்ல. இதில் நான் அரசியலுக்கு எங்கே வரப் போகிறேன். இருந்தாலும், இதுக்கு இப்போ பதில் சொல்வது சரியா இருக்காது. ம்ம்... கொஞ்ச நாள் போகட்டும்," என்றார்.
நீங்களுமா சினேகா!
அஜீத் - சிம்பு - வெங்கட்பிரபு... அடுத்த 'ஆட்டத்துக்கு' ரெடி?
மங்காத்தா வெற்றி தந்த உற்சாகத்தில் சத்தமில்லாமல் அடுத்த ஆட்டத்துக்கு தயாராகிறார் அஜீத்.
தொடர்ந்து தோல்விகள் கொடுத்தாலும் துவளாத மார்க்கெட் அஜீத்துக்கு. ஏகன், அசல் என தொடர் தோல்விகள் கொடுத்த பிறகும் கூட அவரை இயக்க இயக்குநர்கள் மத்தியில் பெரும் போட்டி இருந்தது. இந்த நிலையில் மங்காத்தா வெற்றி பெற்றிருப்பதால், அஜீத்தின் வழக்கமான இயக்குநர்கள் தவிர, வேறு சிலரும் பக்கா ஸ்கிரிப்டோடு அஜீத்தின் அப்பாயின்ட்மெண்டுக்கு காத்திருக்கிறார்களாம்.
ஆனால் அஜீத்தின் இப்போதைய சாய்ஸ் மூன்று பேர். அவரது ஆஸ்தான இயக்குநர் எனப்படும் விஷ்ணு வர்தன், ஆஸ்தான இயக்குநர் பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கும் வெங்கட் பிரபு, கிரீடம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏ எல் விஜய்!
இந்த மூவருக்குமே அடுத்தடுத்து படம் செய்ய விருப்பம் உள்ளதாக நேற்று முன்தினம் ஒரு ஆங்கில தினசரிக்கு அளித்த பேட்டியில் விஜய் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில், ஏ எம் ரத்னம் தயாரிப்பில் அஜீத் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்றும் முதல்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் விசேஷம், அஜீத்தின் தீவிர ரசிகன் என்று சொல்லிக் கொள்கிற சிம்பு முதல் முறையாக அவருடன் சேர்ந்து நடிக்கப் போவதுதானாம்.
பெரிய பட்ஜெட்டில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏஎம் ரத்னத்துடன் இணைந்து மும்பை கார்ப்பொரேட் நிறுவனம் ஒன்று தயாரிக்கிறதாம்.
செய்தியை உறுதிப்படுத்துவது போல, இத்தனை நாள் சோம்பிக் கிடந்த ஏஎம் ரத்னத்தின் சூர்யா மூவீஸ் அலுவலகம் மகா சுறுசுறுப்படைந்துள்ளதாம்.
இதுகுறித்து விசாரிக்க ஏஎம் ரத்னத்தை நாம் தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், "எதுபற்றியும் இப்போது பேசுவது சரியாக இருக்காது. பேசிக் கொண்டிருக்கிறோம். உறுதியானதும் பின்னர் பேசுகிறேன். ஆனால் ஒன்று, இத்தனை நாளும் அமைதியாக இருந்ததற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து சூர்யா மூவீஸ் பேனரில் படங்கள் இனி வரும்," என்றார்.
ஜெனிலியாவா-ஹன்சிகாவா? - வோலாயுதம் படப்பிடிப்பில் மோதல்!
விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'வேலாயுதம்' படத்தில் ஜெனிலியா - ஹன்ஸிகா என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இந்த இருவருக்கும் யார் பெரிய நட்சத்திரம், யாருக்கு படத்தில் முக்கியத்துவம் என்ற மோதல் எழுந்தததாம்.
பின்னர் ஒருவழியாக இந்த மோதலைத் தீர்த்து வைத்தார்களாம்.
வேலாயுதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், படத்தின் விளம்பரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். படத்தின் சிறப்புகள் குறித்து இயக்குநர் ராஜா பேட்டியளித்து வருகிறார்.
படத்தின் இரு ஹீரோயின்களின் ஈகோ போட்டி குறித்து இயக்குநர் ராஜா கூறுகையில், "ஜெனிலியாவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே யார் பெரியவர்? என்ற 'ஈகோ' மனப்பான்மை இருந்தது உண்மைதான். ஆனால், அதை இருவரும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். நேரில் பார்த்தால் சிரித்துக்கொள்வார்கள்.
உள்ளுக்குள் போட்டி மனப்பான்மையை வைத்துக்கொண்டு, வெளியில் சினேகிதிகள் போல் நடிப்பார்கள். பொதுவாக 2 கதாநாயகிகள் சேர்ந்து நடிக்கும்போது இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உருவாவது இயல்புதான்.
ஜெனிலியா, ஹன்சிகா இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள் என்பதால், இருவருக்கும் இடையே போட்டி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால், பிரச்சினை எதுவும் இல்லை.
படத்தில் இரண்டு பேருக்குமே சமமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால், படப்பிடிப்புக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சுமூகமாக நடந்தது. உச்சக்கட்ட காட்சியை கேரள மாநிலம் கொச்சியில் 15 நாட்கள் நடத்தினோம்.
ரஜினிக்கு பாட்ஷா போல...
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு 'எங்க வீட்டு பிள்ளை' போல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 'பாட்ஷா'வைப்போல், கமல்ஹாசனுக்கு 'தசாவதாரம்' போல், விஜய்க்கு `வேலாயுதம்' படம் அமையும்,'' என்றார் ராஜா.
அமைஞ்சா சரி!

0 comments:
Post a Comment